ஒரே இடத்தில் 2 டூ - வீலர் மாயம் | சென்னை செய்திகள் | Dinamalar
ஒரே இடத்தில் 2 டூ - வீலர் மாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:41

ஆதம்பாக்கம் : ஆலந்துார் மண்டல களப்பணியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற, இருவரது டூ - வீலர்கள் மாயமானது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



சென்னை மாநகராட்சியின், ஆலந்துார் மண்டலத்துக்கு உட்பட்ட ஆதம்பாக்கம், 163வது வார்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கொரோனா தடுப்பு களப் பணியாளர்களுக்கான கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.சுகாதார ஆய்வாளர் ரேவதி, வீட்டு வரி வசூலிப்பாளர் ரங்கராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில், களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.கூட்டம் முடிந்து திரும்பியபோது, ரங்கராஜன் மற்றும் களப்பணியாளர் ஒருவரின் வாகனங்கள் திருடு போனது.இது குறித்த புகாரின் படி, ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.கடந்த முறை நடந்த கூட்டத்தின்போதும், ஒருவரின் வாகனம் திருடு போனது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X