'கோவிஷீல்டு' 2வது டோஸ் தடையின்றி கிடைக்குமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:41

குரோம்பேட்டை : பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகளில், கொரோனா தடுப்பூசி, 2வது டோஸ் போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.எனினும், தற்சமயம், போதிய அளவில் கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், சுகாதார நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.



ஓரிரு நாட்களில், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனுமதிகொரோனா பரவலை கட்டுப்படுத்த, பொதுமக்களுக்கு 'கோவாக்சின், கோவிஷீல்டு' என்ற இரண்டு வகை தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்த இரண்டு தடுப்பூசிகளும், ஜனவரி முதல், மக்கள் பயன்பாட்டிற்கு வந்தன.முதல் கட்டமாக, சுகாதாரத் துறை மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, 60 வயது மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன.இந்நிலையில், தொற்று பரவலின், இரண்டாவது அலை, தீவிரமடைந்துள்ளதால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், மே, 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், ஏற்கனவே, 'கோவிஷீல்டு' தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், 6 - 8 வாரங்கள் கழித்து, இரண்டாவது தவணை ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். தொடர்புஅதேபோல், 'கோவாக்சின்' தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், 28 நாட்கள் கழித்து, இரண்டாவது தவணை ஊசி போட்டுக்கொள்ள வேண்டும்.சென்னை புறநகர் பகுதிகளான, பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகளில், 'கோவிஷீல்டு' தடுப்பூசி, 2வது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டியவர்கள் தினமும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் குவிந்து வருகின்றனர். எனினும், தற்சமயம் போதிய அளவில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், பலரும் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.



குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிலும், 'கோவிஷீல்டு' இருப்பு குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.இது குறித்து, நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:அரசிடம் இருந்து, 'கோவாக்சின்' தடுப்பூசி மட்டுமே அனுப்பப்படுகிறது. அதையே, பொதுமக்களுக்கு செலுத்துகிறோம். 'கோவிஷீல்டு' தடுப்பூசி ஓரிரு நாட்களில் வந்துவிடும். அதன் பின், 2வது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டியவர்கள், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்பு கொண்டு போட்டுக் கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X