சிறுபாலம் பணி மந்தம்: வாகன ஓட்டிகள் பாதிப்பு | சென்னை செய்திகள் | Dinamalar
சிறுபாலம் பணி மந்தம்: வாகன ஓட்டிகள் பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:42

திருநீர்மலை : பல்லாவரம் - திருநீர்மலை சாலையில், சிறுபாலம் கட்டும் பணி மந்த மாக நடந்து வருவதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.ஜி.எஸ்.டி., சாலையில், பான்ட்ஸ் சிக்னலில் இருந்து பிரிந்து செல்கிறது, பல்லாவரம் - திருநீர்மலை சாலை. இச்சாலையை ஒட்டி, தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.



இதனால், எந்த நேரமும் வாகன போக்குவரத்து காணப்படும்.மற்றொரு புறம், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையை இணைப்பதால், கனரக வாகனங்களும் அதிகமாக செல்கின்றன. இச்சாலையில், லட்சுமிபுரம் அருகே, திருநீர்மலை ஏரி உபரி நீர் செல்லும் வகையில், சிறுபாலம் கட்டும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது.ஆனால், பல்வேறு காரணங்களால், இப்பணி மந்தமாகவே நடந்து வருகிறது.இதனால், 'பீக் அவர்' நேரத்தில், அந்த இடத்தில், நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, சிறுபாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X