11வது தளத்தில் இருந்து விழுந்த வாலிபர் பலி | சென்னை செய்திகள் | Dinamalar
11வது தளத்தில் இருந்து விழுந்த வாலிபர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:44

அம்பத்துார் : அம்பத்துாரில், மனைவியிடம் மொபைலில் பேசிக்கொண்டிருந்த கட்டுமான தொழிலாளி, 11வது தளத்தில் இருந்து, தவறி கீழே விழுந்து பலியானார்.



அம்பத்துார் அடுத்த கள்ளிக்குப்பம், ரெட்ஹில்ஸ் சாலையில், தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கான, கட்டுமான பணி நடக்கிறது.அதில், உத்தர பிரதேசம், கங்கை பஜார், சவுராகா கிராமத்தைச் சேர்ந்த மோகன் குமார், 25, கட்டுமான வேலையும், அவரது நண்பர் ராம்ஜித் நிசாத், 25, பெயின்டிங் வேலையும் செய்து வந்தனர்.நேற்று முன் தினம் இரவு, அந்த கட்டடத்தின், 11வது தளத்தில், இருவரும் மது குடித்தனர். போதை தலைக்கேறிய ராம்ஜித் நிசாத், அப்படியே துாங்கி விட்டார்.



மோகன்குமார், ஊரில் உள்ள அவரது மனைவியிடம், மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.இது குறித்து, அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X