எமதர்மன் வேடமணிந்து விழிப்புணர்வு | சென்னை செய்திகள் | Dinamalar
எமதர்மன் வேடமணிந்து விழிப்புணர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:44

அடையாறு : காவல் துறை சார்பில், முக கவசம் அணிவதை வலியுறுத்தி, எமதர்மன் வேடமணிந்த நபர் வழியாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



சென்னையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, பரிசோதனை, முறையான சிகிச்சை எடுத்தல், தடுப்பூசி போடுதல், முக கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை கடைப்பிடிக்க, அரசு வலியுறுத்தி உள்ளது.இதை, விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடத்த, காவல் துறை முடிவு செய்தது. அடையாறு காவல் மாவட்டம், அடையாறு சிக்னல் அருகில் நடந்த நிகழ்ச்சியில், எமதர்மன் வேடமணிந்த நபர், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்று, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மேலும், முக கவசம் அணியாமல் சென்ற நபர்களை மறித்து, போலீசார் முக கவசம் வழங்கினர். அதோடு, முக கவசம் அணிவதால் ஏற்படும் நன்மை குறித்தும் விளக்கப்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X