மோசடி நில உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:45

சென்னை : வீட்டுமனை வழங்குவதாக கூறி மோசடி செய்த நில உரிமையாளர், மேம்பாட்டாளர்கள் இரண்டு பேர் மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



சென்னையை அடுத்த மாங்காடு, சிக்கராயபுரம் பகுதியில், வீட்டு மனைகள் விற்கும் திட்டத்தை, தனியார் சிலர், 2016ல் அறிவித்தனர்.இதில் மனை வாங்க, ஜி.எல்.கோவிந்தன் என்பவர், 34.50 லட்சம் ரூபாயை செலுத்தினார்.இத்துடன், வங்கிக்கடன் வாயிலாக, 5 லட்ச ரூபாய் செலுத்தவும் ஏற்பாடு செய்தார்.இதில் நில உரிமையாளரும், மனை மேம்பாட்டாளர்கள் இருவரும், தவறான தகவல்கள் அளித்து, மோசடி செய்வதாக கோவிந்தன் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் அளித்தார்.



இது தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் ஞானதேசிகன் தலைமையிலான குழு அமர்வு பிறப்பித்த உத்தரவு:மக்கள் பல்வேறு பிரச்னைகளுக்கிடையே சேமித்த பணத்தை வைத்து, மனை வாங்க வருகின்றனர். அவர்களின் சேமிப்பு பணத்தை மோசடி செய்வதை ஏற்க முடியாது.இதில் சம்பந்தப்பட்ட, நில உரிமையாளரும், நில மேம்பாட்டாளர்களும், மனுதாரர் செலுத்திய பணத்துக்கு உரிய மனையை வழங்க, விற்பனை பதிவு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.அத்துடன் நில உரிமையாளர், மேம்பாட்டாளர்கள் என, இம்மூன்று பேர் மீதும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து, போலீஸ்கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த உத்தரவு நகலை, போலீஸ் கமிஷனருக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X