வேளச்சேரி : திருமண நிச்சயம் ஆன வாலிபரை வரவழைத்து, அவரது செயினை பறித்த, பெண் உட்பட இருவரை, போலீசார் கைதுசெய்தனர்.
பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் அஸ்வின், 24; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது. நேற்று முன்தினம், ஏற்கனவே அறிமுகமான பெண்ணின் அழைப்பை ஏற்று, வேளச்சேரி, விரைவு சாலைக்குச் சென்றார்.அங்கு, அஸ்வினிடம், பெண் பணம் கேட்டுள்ளார். அந்நேரத்தில், தன் ஆண் நண்பரையும் பெண் வரவழைத்து, இருவரும் சேர்ந்து பணம் கேட்டுள்ளனர்.தர மறுத்ததால், அஸ்வின் அணிந்திருந்த, 5 சவரன் நகையை பறித்து சென்றனர்.இது குறித்து விசாரித்த, வேளச்சேரி போலீசார், வேளச்சேரி, கம்பர் தெருவைச் சேர்ந்த செல்வி, 24, மற்றும் அவரது ஆண் நண்பரான விஜய்காந்தி, 19, ஆகியோரை கைது செய்தனர். நகை பறிமுதல் செய்யப்பட்டது.