மாவட்ட தலைநகரில் 26ம் தேதி போராட்டம்; ரேஷன் கடை பணியாளர் சங்கம் அறிவிப்பு | கடலூர் செய்திகள் | Dinamalar
மாவட்ட தலைநகரில் 26ம் தேதி போராட்டம்; ரேஷன் கடை பணியாளர் சங்கம் அறிவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:47

கடலுார் : பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் வரும் 26ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.



இதுகுறித்து சங்க சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட பயோ மெட்ரிக் ரேஷன் கார்டில் விரல் ரேகைப் பதிவு, கண் விழித்திரை பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் உள்ளன.தற்போது விரல் ரேகையை பதிவு செய்யும் தொழில் நுட்பமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.கொரோனா பரவல் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் விரல் ரேகை பதிவிற்கு பதிலாக கண் விழித்திரையை பதிவு செய்யும் தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.



இதனால், தொற்று பரவல் குறையும்.பி.ஓ.எஸ்., இயந்திரம் செயல்படுத்துவதற்கு 4ஜி வேக இணைய இணைப்புகள் வழங்கப்படாததால் பொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது. பலகட்ட போராட்டம் நடத்தியும் அரசு கவனம் செலுத்தவில்லை.ரேஷன்கடை பணியாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை ஆகிய பதவி உயர்வுகள் வழங்கப்படும் ஊதிய மாற்றம் செய்யப்படாமல் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும்.



பல்பொருள் அங்காடிகளில் பணியாற்றி வருவோருக்கு கொரோனா காலத்தில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பல்வேறு படிகள் வழங்கப்படவில்லை. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X