ஏலச்சீட்டு மோசடி: மாமியார், மருமகன் கைது | சென்னை செய்திகள் | Dinamalar
ஏலச்சீட்டு மோசடி: மாமியார், மருமகன் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:48

அண்ணாநகர் : அண்ணாநகரில், ஏலச்சீட்டு நடத்தி, 48 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வழக்கில், மாமியார், மருமகன் ஆகிய இருவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.



தலைமறைவாக உள்ள குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.அண்ணா நகர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 58. இவர், தன் குடும்பத்தினருடன் இணைந்து, ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.அவரிடம் சுற்று வட்டாரப் பகுதியில் வசிக்கும், 100க்கும் மேற்பட்டோர், மாதந்தோறும், 2,000 ரூபாய் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.அந்த வகையில், மார்ச் மாதம் முடிந்த ஏலச்சீட்டில் பணம் செலுத்தியோருக்கான, 48 லட்சம் ரூபாய் தராமல், ராஜேஸ்வரி, தன் குடும்பத்துடன் தலைமறைவானார்.இது குறித்து, பாதிக்கப்பட்டோர், அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.போலீசார், தலைமறைவாக இருந்த, ராஜேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வந்தனர்.



இந்நிலையில், நேற்று சோழிங்கநல்லுார் பகுதியில் பதுங்கி இருந்த ராஜேஸ்வரி மற்றும் அவரது மருமகன் ரவி ஆகிய இருவரை, போலீசார் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.இதை அறிந்த ஏலச்சீட்டில் பணம் கட்டி ஏமாற்றம் அடைந்தோர், அண்ணாநகர் காவல் நிலையம் முன் திரண்டனர். பின் அவர்களிடம், அண்ணா நகர் போலீசார் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட இருவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X