அரைகுறையாக மூடப்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம் | சென்னை செய்திகள் | Dinamalar
அரைகுறையாக மூடப்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:48

கே.கே.நகர் : சாலை நடுவே, சென்னை குடிநீர் வாரியம் தோண்டிய பள்ளத்தால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.



கோடம்பாக்கம் மண்டலம், 131வது வார்டு, கே.கே.நகரில், ஆர்.கே.சண்முகம் சாலை உள்ளது.இந்த சாலையின் நடுவே, சென்னை குடிநீர் வாரியம் பள்ளம் தோண்டியது. பணி நிறைவடைந்தவுடன், அரைகுறையாக பள்ளத்தை மூடிவிட்டு, தடுப்புகள் வைத்து சென்றுள்ளனர்.இதனால், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைகின்றனர்.குறிப்பாக, இரவு நேரங்களில், அவ்வழியில் செல்வோருக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், சாலையை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X