கொரோனா தொற்று கண்டறியும் முகாம்களை அதிகப்படுத்துங்கள்! சுகாதார துறையினரிடம் கலெக்டர் அறிவுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:49

கடலுார் : அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அதிக அளவு நடத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் கேட்டுக் கொண்டார்.



கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவி வருகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் இறப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.மாவட்டத்தில் கடந்த 18ம் தேதி வரை தொற்றால் 302 பேர் இறந்துள்ளனர். தொற்று ஏற்பட்டவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ சிகிச்சைக்கு வர வேண்டும்.



சிலர், அவ்வாறு வராமல் தாமே சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தொற்று அதிகரித்து வருகிறது.தொற்றால் ஏற்படும் இறப்புகளை குறைப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.



கூட்டத்தில், கலெக்டர் சந்திரசேகர சகாமுரி பேசியதாவது: நோய் தொற்று குறித்து அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் பரிசோதனை செய்து கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே தொற்று கண்டறியப்பட்டால் சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமடையலாம்.சர்க்கரை வியாதி, இருதய நோய் போன்ற நோய்களுக்கு தொடர்ச்சியாக மருந்து உட்கொண்டு வருபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.



இதுபோன்றவர்களுக்கு, மருத்துவர்கள் அல்லது சுகாதார பணியாளர்கள் அறிவுரை வழங்கி அவர்களை கண்காணிக்க வேண்டும்.தொற்று பாதித்தவர்களை சிறப்பு கவனம் செலுத்தி 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டும். உயிர் காக்கும் மருந்துகளை தேவையான அளவில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நோயாளிகளை காத்திருக்க விடாமல் உடனடியாக சிகிச்சை வழங்க வேண்டும்.கொரோனா பரிசோதனை முடிவு வந்தவுடன் தாமதிக்காமல் முடிவுகளை அவர்களுக்கு தெரிவித்து தொற்று உள்ளவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.



அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அதிக அளவு நடத்த வேண்டும். தனியார் மருத்துவமனைகள் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தொற்று பரிசோதனைகள், சி.டி.ஸ்கேன் போன்ற விபரங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள வரும் நோயாளிகள் குறித்த விபரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.



பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும் போது கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்.சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்று இறப்பைத் தடுப்பதற்கு பொதுமக்கள் தங்கள் உடலில் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து மருத்துவர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.



கூட்டத்தில் டி.ஆர்.ஓ., அருண் சத்யா, இணை இயக்குனர் (மருத்துவம்) ரமேஷ்பாபு, அரசு தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் சாய்லீலா, ராஜா முத்தையா மருத்துவமனை கண்காணிப்பாளர் நிர்மலா மற்றும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X