போன் டவர் அமைக்க எதிர்ப்பு | கடலூர் செய்திகள் | Dinamalar
போன் டவர் அமைக்க எதிர்ப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:50

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் மொபைல் போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.



நெல்லிக்குப்பம், திடீர்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் மொபைல் போன் நிறுவனம் டவர் அமைக்கும் பணியை கடந்த மாதம் துவக்கினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்தனர்.இந்நிலையில், பணியை தடுத்த 5 பேர் மீது தனியார் மொபைல் போன் நிறுவனத்தினர், நெல்லிக்குப்பம் போலீசில் புகார் அளித்தனர்.இதனையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11:00 மணியளவில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.



அவர்களிடம் சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் கூட்டமாக வருவது தவறு. 5 பேர் மட்டும் பிறகு இன்ஸ்பெக்டரிடம் பிரச்னையை கூறுங்கள் என கூறியதைத் தொடர்ந்து அனைவரும் 11:45 மணிக்கு கலைந்து சென்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X