மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை | கடலூர் செய்திகள் | Dinamalar
மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:50

விருத்தாசலம் : குடும்பத் தகராறு காரணமாக மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.



விருத்தாசலம், புதுப்பேட்டை அண்ணா வீதியைச் சேர்ந்தவர் பெரியசாமி, 45; இவரது மனைவி தேவி, 42; திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.பெரியசாமியின் குடிப்பழக்கத்தினால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதில், ஆத்திரமடைந்த தேவி, வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்தார். படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X