மாவட்டத்தில் 156 பேருக்கு தொற்று; 3 பேர் பலி | கடலூர் செய்திகள் | Dinamalar
மாவட்டத்தில் 156 பேருக்கு தொற்று; 3 பேர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:51

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மூவர் இறந்துள்ளனர்.



கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 27 ஆயிரத்து 829 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று ஒரே நாளில் 156 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்து 985 ஆக உயர்ந்தது.207 பேர் குணமடைந்ததால், இதுவரை 26 ஆயிரத்து 306 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.



தொற்று பாதித்த 827 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 117 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.மாவட்டத்தில் தொற்று பாதித்து நேற்று முன்தினம் வரை 305 பேர் இறந்துள்ள நிலையில், நேற்று, கடலுாரைச் சேர்ந்த 83 வயது முதியவர், பண்ருட்டியைச் சேர்ந்த 58 வயது பெண், நெய்வேலியைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி இறந்துள்ளனர். இதனையடுத்து இறப்பு எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X