வடமாநில தொழிலாளரை தக்கவைப்பது காலத்தின் கட்டாயம்! நம்பிக்கையூட்ட வேண்டியது மிக அவசியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

21 ஏப்
2021
01:47
பதிவு செய்த நாள்
ஏப் 20,2021 23:56

திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், அத்தியாவசிய தேவைகளை செய்துகொடுத்து, வடமாநில தொழிலாளரை தக்க வைத்துக்கொள்வது அவசியமாகிறது.திருப்பூரில், தமிழகம் மட்டுமின்றி, ஒடிசா, ஜார்கண்ட், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் என வெளிமாநில தொழிலாளர்கள், லட்சக்கணக்கில் பணிபுரிகின்றனர். பின்னலாடை உற்பத்தியின் அனைத்து பிரிவுகளிலும், வெளிமாநில தொழிலாளரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது.


நாடுமுழுவதும், கொரோனா இரண்டாவது அலை வீசிவருகிறது. வைரஸ் பரவலை தடுக்க, ஒவ்வொரு மாநில அரசும், கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. தமிழகத்தில், நேற்று முதல், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் ஊரடங்குகள், திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பஸ், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விடுமோ, வேலை மற்றும் வருவாய் இழப்பு, சொந்த ஊர் செல்ல முடியாத நிலை, உணவுக்கு தட்டுப்பாடு வருமோ என தொழிலாளர்கள் பயப்படுகின்றனர்.இதனால், முன்னெச்சரிக்கையாக வடமாநில தொழிலாளர்கள், குழுக்களாக சொந்த ஊர் நோக்கி செல்ல துவங்கி விட்டனர். திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், வடமாநிலம் செல்தும் ரயில்களுக்காக, தினமும் ஏராளமானோர் காத்திருப்பதை காணமுடிகிறது. இதனால், திருப்பூரில் தொழிலாளர் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.லகுஉத்யோக் பாரதி தேசிய செயலாளர் மோகனசுந்தரம் கூறியதாவது:கொரோனா இரண்டாவது அலையால், அந்த தொழிலாளர்கள் மீண்டும், சொந்த ஊர்களுக்கு புறப்படுகின்றனர். திருப்பூர் பின்னலாடை துறையை பொருத்தவரை, 50 சதவீதம் வடமாநில தொழிலாளரை சார்ந்து இயங்குகிறது.



எனவே, பின்னலாடை நிறுவனங்கள், நெருக்கடியான சூழலிலும், வடமாநில தொழிலாளருக்கு, சிறப்பான வகையில் உணவு, தங்குமிட வசதி கிடைக்க செய்ய வேண்டும்.முழு ஊரடங்கு மீண்டும் வராது என, வடமாநில தொழிலாளர் மத்தியில் நம்பிக்கையூட்ட வேண்டும். இரண்டாவது முறை சொந்த ஊர் செல்லும் தொழிலாளர், மீண்டும் திருப்பூருக்கு திரும்புவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.


இதனால், கொரோனா அலைகள் ஓய்ந்தாலும், தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்து, பின்னலாடை துறை தொடர்ந்து பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.எந்த சூழலிலும், நிறுவனம் தங்களை கைவிட்டு விடாது என்கிற நம்பிக்கையூட்ட வேண்டும். இதனால், வடமாநில தொழிலாளர் சொந்த ஊர் செல்வதை தடுக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஏப்-202117:58:07 IST Report Abuse
ஆப்பு தமிழர்கள் வெட்கி தலை குனிய வேண்டும்.அது சரி, வடக்கே பி.ஜே.பி ஆட்சியில் பாலும் தேனும் ஓடும்போது இங்கே எதுக்கு வர்ராங்க? பஞ்சம் பிழைக்கவா?
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
21-ஏப்-202117:35:49 IST Report Abuse
SENTHIL NATHAN இந்த முதலாளிங்க தும்பை விட்டு வாலைப்பிடிப்பாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X