மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:57

மானாவாரி மற்றும் இறவைக்கு ஏற்ற வீரிய ஒட்டு ரகமான கோ 6 மக்காச்சோளம் 2012 ல் இந்திய அளவிலும் தமிழகத்திலும் வெளியிடப்பட்டது. 110 நாட்களில் இறவையில் எக்டேருக்கு சராசரியாக 8500 கிலோ, மானாவாரியில் 5000 கிலோ மகசூல் தரும். அதிக பட்சமாக ஒரு எக்டேருக்கு 13 டன்கள் வரை மகசூல் தரும் வாய்ப்புள்ளது.



தமிழகத்தில் பவானிசாகர், பவானி, மேட்டூர், சத்தியமங்கலம் மற்றும் அண்ணா பண்ணை மாநில விதைப்பண்ணைகளில் வேளாண் பல்கலை விஞ்ஞானிகளின் மேற்பார்வையில் கோ 6 வீரிய ஒட்டு ரக விதை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய அளவில் 2013ல் வெளியிடப்பட்ட கோ. எச் (எம்) 8 வீரிய ஒட்டு ரகம் 95--100 நாட்களில் அறுவடை செய்யலாம். இறவையில் எக்டேருக்கு 8000 - 8500 கிலோ, மானாவாரியில் 4500- -- 5000 கிலோ மகசூல் தரும். அதிகபட்சமாக 12 டன் வரை பெறலாம்.விதையளவு மற்றும் விதை நேர்த்திஒரு ஏக்கருக்கு வீரிய ஒட்டு மக்காச்சோள விதை 8 கிலோ வரை தேவைப்படும்.



ஒரு கிலோ விதைக்கு 6 கிராம் மெட்டலாக்ஸில் பூஞ்சாணக் கொல்லி மருந்தை ஈரவிதை நேர்த்தி செய்து உலரவிட வேண்டும். இதனால் அடிச்சாம்பல் நோய் தாக்குதலைத் தவிர்க்கலாம். கோடை உழவு செய்வதன் மூலம் படைப்புழுவின் கூட்டுப்புழு பருவங்கள் மண்ணில் இருந்து வெளியே வருகின்றன. இவற்றை பறவைகள் உண்பதால் பயிர்களில் பூச்சி தாக்குதல் குறையும்.கடைசி உழவின் பொது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டால் கூட்டுப்புழுக்கள் பாதிப்புக்குள்ளாகும். இவை அந்துப்பூச்சிகளாக வெளிவருவது தடுக்கப்படுகிறது.ஏற்கனவே விதை நேர்த்தி செய்திருந்தாலும் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பிவேரியா பெசியானா பூஞ்சாணகொல்லி அல்லது தையாமீத்தாக்ஸம் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.



இதனால் விதைத்த 25 நாட்களுக்கு படைப்புழுக்களிடமிருந்து ஆரம்ப நிலை பாதுகாப்பு கிடைக்கின்றது.மக்காச்சோளத்தை நெருக்கி பயிரிடுவதால் புழுக்களும் அந்திப்பூச்சிகளும் அடுத்த செடிக்கு எளிதாக பரவும். பத்து வரிசைக்கு ஒரு முறை 60 செ.மீ இடைவெளி விட்டு நட்டால் பூக்கள் மற்றும் கதிர்பிடிக்கும் பருவத்தில் பூச்சிதாக்குதல் இருந்தால் எளிதாக மருந்து தெளிக்கலாம்.வரப்பு பயிராக தட்டைப்பயிர், சூரியகாந்தி மற்றும் எள் பயிர்களை 2 -- 3 வரிசைகள் வளர்த்தால் நன்மை தரும் ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் பெருகும். ஏக்கருக்கு 20 என்ற அளவில் இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் இனக்கவர்ச்சி குப்பி வைத்து படைப்புழுக்களின் ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். இதன் மூலம் இனச்சேர்க்கையும் பயிர்சேதமும் தவிர்க்கப்படும்.15--20 நாட்கள் வயதில் 10 லிட்டர் தண்ணீரில் 20 மில்லி அசாடிராக்டின் அல்லது எமாமெக்டின் பென்சோயேட் 5 எஸ்ஜி 4 கிராம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் குருத்துப் பகுதிகளில் தெளிக்க வேண்டும். செடிகள் விசைத் தெளிப்பான் பயன்படுத்தக்கூடாது.40--45 நாட்களில் ஸ்பைனிடோரம் 12 எஸ்சி 5 மில்லி அல்லது நோவலூரான் 10 இசி 15 மில்லி அளவை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் குருத்துப் பகுதிகளில் தெளிக்க வேண்டும். விசைத்தெளிப்பான் மூலம் தெளிக்கும் போது மருந்துகளை 3 மடங்கு அளவில் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். கதிரின் மேல் தோல் பழுத்து முதிர்ந்தவுடன் காய்ந்து விடும். விதைகள் கடினமாகவும், காய்ந்தும் காணப்படும். இப்பருவம் அறுவடைக்கேற்றது.சீனிவாசன் உதவி பேராசிரியர் பூச்சியியல் துறை ரவிகேசவன் துறைத்தலைவர் தானியங்கள் துறை வேளாண் பல்கலை கோவை

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X