பெரும் வரமாய் தடுப்பூசி வருகை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:00

ராமநாதபுரம் : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீயெனப் பரவுகிறது. இதற்கென பிரத்யேக சிகிச்சை முறை இல்லை. மருந்து, மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் பெரும் வரமாய் தடுப்பூசி வருகை அமைந்துள்ளது.



இந்தியாவில் ஜன., முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது. கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில வெளிநாட்டு தடுப்பூசிகளை மத்திய அரசு அனுமதிக்க இருக்கிறது.இதுவரை 11.52 கோடி கோவிஷீல்டு, 1.14 கோடி கோவாக்ஸின் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. எப்போதும் சுகாதார நடவடிக்கையில் முந்தி நிற்கும் தமிழகம், தடுப்பூசி செலுத்தும் பணியில் மட்டும் பிற மாநிலங்களை காட்டிலும் சற்றே பின்தங்கியுள்ளது. இதற்கு மக்களிடம் காணப்படும் ஆர்வமின்மை, தேவையற்ற பயம், பரவும் வதந்தி முக்கிய காரணங்களாக இருக்கின்றன. ஆனால், 'யாரும் பயப்பட தேவையில்லை. தடுப்பூசி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்' என டாக்டர்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.



அவர்கள் அளித்த பேட்டி :தடுப்பூசி தக்க பாதுகாப்பு எஸ்.குட்லக் ராஜேந்திரன், தொழிலதிபர், திருவாடானை: நான் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்கிறேன். முதல் முறையாக போடும் போது உடல் சோர்வு இருந்தது. மறுநாளே சரியாகிவிட்டது. இரண்டாவது டோஸ் போடும் போது உடலில் எந்தவித மாற்றமும் இல்லை. இப்போது நான் நலமாக இருக்கிறேன். தொழில் சம்பந்தமாக வெளி மாநிலங்களுக்கு செல்வதால் தடுப்பூசி அத்தியா வசியமாக போட்டுக்கொள்ள வேண்டும் என்ற முடிவிற்கு வந்தேன். தடுப்பூசியால் எந்தவித பிரச்னையும் இல்லை. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.



கொரோனாவிற்கு தடுப்பூசி தான் தக்க பாதுகாப்பு. யாரும் பயப்படவேண்டாம்.எந்த தொந்தரவும் இல்லைஎன்.போஸ், பொதுச்செயலா ளர்,வியாபாரிகள் சங்கம், பரமக்குடி:வியாபாரிகளுக்கு முன் உதாரணமாக செயல்படும் நோக்கில் ஆரம்ப நிலையிலேயே கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டேன். எனக்கு வயது 68 ஆன நிலையில் ரத்த அழுத்தம் மட்டும் டாக்டர்கள் பார்த்தார்கள். நான் முதல் டோஸ் செலுத்தி கொண்ட போதும், இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்ட போதும் என் உடல் நிலையில் எந்த தொந்தரவும் இல்லை.நான் தொடர்ந்து எனது ஜவுளி நிறுவனத்தில் சகஜமாக பணிபுரிந்தேன்.என்னுடன் ஊசி போட்டுக் கொண்ட ஒரு சிலருக்கு மட்டும் லேசான காய்ச்சல், உடல்வலி இருப்பதாக கூறினர்.



பயமின்றி, பதட்டப்படாமல் பொது மக்கள் ஊசி செலுத்திக் கொள்ளலாம்.சமூக வலை தளங்களை நம்பாதீர்எம்பெத்தராஜ், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, சாயல்குடி: கொரோனோ வேகமாக பரவிவரும் சமயத்தில் நமக்கு இருக்கும் ஒரே தீர்வாக தடுப்பூசி மட்டுமேஆகும். வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீணாக ஆதாரமில்லாமல் பரப்பப்படும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது. முதல் தடுப்பூசி கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் போட்டுள்ளேன் அடுத்த தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயாராக உள்ளேன். தடுப்பூசியின் பயனை முழுமையாக தெரிந்துகொள்வது அவசியம். சமூக இடைவெளி மட்டும் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு கிடைக்கிறது .



எனவே அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.தடுப்பூசி முக்கியம் பெ.இளங்கோ, அலுவலக உதவியாளர், முதுகுளத்துார்: நான் கோவிஷீல்டு இரண்டு டோஸ் போட்டு இருக்கிறேன். இதுவரை எந்த பிரச்னையும் இல்லை.முதல் டோஸ் போட்டபின் ஒருநாள் மட்டும் கையில் வலி ஏற்பட்டது அதுவும் பெரியளவில் இல்லை.கொரோனா பரவிவரும் சூழலில் தடுப்பூசி என்பது முக்கியம். கொரோனா பாதிப்பை கட்டுபடுத்த தடுப்பூசியே வரப்பிரசாதம். இரண்டு டோஸ் போட்ட பின்பு எந்த பின்விளைவுகளும் இல்லை.எந்த பாதிப்பும் இல்லைவே.தவமுருகன், ஊர்புற நுாலகர், முத்துப்பேட்டை: கொடிய கொரோனா நோயால் நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதின் மூலம் கொடிய கொரோனா நோய் தாக்கத்தில்இருந்து தப்பித்துக்கொள்ளலாம். அதற்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். நான் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியுள்ளேன். இதுவரை எந்த பாதிப்பும் இல்லை, விரைவில் இரண்டாம் கட்ட தடுப்பூசியும் இட உள்ளேன்.வரப்பிரசாதமாக கருத வேண்டும்டாக்டர் ஆர்.மலையரசு, நரம்பியல்பிரிவு தலைவர், ராமநாதபுரம்அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை: மாநில அளவில்மதுரையில் முதல்வர் தடுப்பூசி திட்டத்தை துவக்கிய போது அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் முதல் தடுப்பூசி போட்டார். அதற்கு அடுத்ததாக ராமநாதபுரம் மாவட்ட தலைவரான நான் இங்கு கலெக்டர் முன்னிலையில் மாவட்டத்தில் முதல் தடுப்பூசி போட்டேன்.கோவி ஷீல்டு இரண்டு டோசும் போட்டுவிட்டேன். எந்த பக்கவிளைவும் இல்லை.




மே முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டால்காய்ச்சல் வரும். அதுபோல் தான். காய்ச்சல் மருந்து சாப்பிட்டால் போதும்.பக்கவிளைவுகள் பெரும்பாலும் இல்லை. தடுப்பூசி போடுவது அவர்களுக்கு பாதுகாப்பானது. தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர். அப்படி வந்தாலும்போடாதவர்களுக்கு ஏற்படும் தீவிரத்தை காட்டிலும் குறைவாகத்தான் இருக்கும். பொதுமக்கள் இதனை தங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதி தடுப்பூசி போட வேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம்.கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்டாக்டர் எஸ்.பொற்கொடி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர், ராமநாதபுரம்: கொரோனா தடுப்பூசிகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது. தடுப்பூசி பாதுகாப்பானது என்று அரசு கூறியதை நாங்கள் நம்பினோம். முதல் நாளிலேயே கோவி ஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டேன். மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க இதனை செய்தோம். எனக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. பலர் போட்டு விட்டு அடுத்த நாள் லீவு கேட்டனர். ஆனால் எல்லோருமே பணிக்கு வந்து விட்டனர். ஒரு சிலருக்கு உடல் வலி, லேசான காய்ச்சல் இருந்துள்ளது. கர்ப்பிணிகளுக்கு கூட போடலாம் என ஒரு சில ஆய்வு கூறுகிறது.எந்த தடுப்பூசிடாக்டர் ஆர்.ஆனந்த், எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு நிபுணர், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை: கொரோனா தடுப்பூசியால் எந்த பக்கவிளைவும் கிடையாது. மாரடைப்புக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அதே நேரம் எந்த தடுப்பூசி போடுவது என்ற சந்தேகம் மக்களிடம் அதிகம் உள்ளது. கோவி ஷீல்டு, கோவாக்சின் என்ற இரு தடுப்பூசிகள் உள்ளதால் மருத்துவமனைக்கு வருவோரில் பலர் எதை போடுவது என்ற குழப்பத்தில் டாக்டரிடம் ஆலோசிக்கலாம், என திரும்பி செல்கின்றனர்.இரண்டு தடுப்பூசிகளும் கொரோனாவின் எதிர்ப்பு சக்திகள் தான். கோவிட் ஷீல்டு தடுப்பூசி லண்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்காவில் பரிசோதிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி என்பது ஒரிஜினல் கொரோனா வைரசை எடுத்து அதன் சக்தியை முழுமையாக குறைத்து நமது உடலில் செலுத்துவது. அலர்ஜி இல்லாதவர்களும் போடலாம். தடுப்பூசியின் இரண்டாவதுடோசை 4 முதல் 6 வாரங்களுக்குள் கட்டாயம் போட வேண்டும். தடுப்பூசி போட்டு காய்ச்சல் வந்தால் தான் அது வேலை செய்கிறது என்று அர்த்தம். உடல் நிலையை பொறுத்து அப்படி வராவிட்டாலும் வேலை செய்யத்தான் செய்யும்.--நோயாளிகளுக்கு பாதுகாப்புடாக்டர் ஏ.சின்னத்துரைஅப்துல்லா, தனியார் மருத்துவர்,ராமநாதபுரம்: கொரோனா தடுப்பூசியால் மக்களுக்கு கொரோனாவில் இருந்து நிச்சயம் பாதுகாப்பு கிடைக்கும். நிச்சயம் 80 சதவீதம் பேருக்கு கொரோனா வர வாய்ப்பு இல்லை. அப்படி 20 சதவீதம் பேருக்கு வந்தாலும் எதிர்ப்பு சக்தி காரணமாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.நான் தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுள்ளேன். எந்த பிரச்னையும் இல்லை. தடுப்பூசி போடுவதால் இந்தியாவில்நோய் எதிர்ப்பு சக்தி 60 முதல் 70 சதவீதம் மக்களுக்கு ஏற்பட்டால் கொரோனா எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. கர்ப்பிணிகள் தவிர 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் போடலாம்.இருதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், ரத்த கொதிப்பு, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட அனைத்து பிரச்னை உள்ளவர்களும் தாரளமாக தடுப்பூசி போடலாம்.விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்டாக்டர் எஸ்.வசந்த பிரியா நாச்சியார், வேலானுார் ஆரம்ப சுகாதார நிலையம், உத்தரகோசமங்கை: கொரோனா தடுப்பூசியால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது. அனைவரும் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள் தான் அதிகம் பாதிக்கப்படுவதால் அவர்கள் தான் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும். நான் இரண்டு டோஸ் போட்டுள்ளேன். எந்த பிரச்னையும் இல்லை. தடுப்பூசி போட்டவர்கள் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசால் தற்போது துவக்கப்பட்ட மினி கிளினிக்குகளில் இலவசமாக தடுப்பூசி போடலாம்.பக்க விளைவுகள் கிடையாதுடாக்டர் ஜெ.சுகந்திபோஸ், வட்டார மருத்துவ அலுவலர், ஆர்.எஸ்.மங்கலம்: நான் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டு முறை போட்டுவிட்டேன். தடுப்பூசி போட்ட பின்பு எனக்கு எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. ஒரு சிலருக்கு இரண்டு நாட்களுக்கு லேசான காய்ச்சல், உடல் அசதி ஏற்பட்டு பின் சரியாகி விடும். ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் 3,000 த்திற்கும் மேற்பட்டோர் இதுவரை தடுப்பூசி போட்டுள்ளனர். யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. எனவே எந்தவித அச்சமும் இன்றி, பொதுமக்கள் முன்வந்து தடுப்பூசிகளை போட்டு கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் வரும் பொய்யான தகவல்களை யாறும் நம்ப வேண்டாம்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X