பங்கு வர்த்தகத்தில் புரோக்கர்களுக்கு | மதுரை செய்திகள் | Dinamalar
பங்கு வர்த்தகத்தில் புரோக்கர்களுக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:01

மதுரை : பங்குச் சந்தையில் புரோக்கர்கள் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் வசதிக்கு தடை கோரியதில் 'செபி'க்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.



திருநெல்வேலி ஆவுடயனுார் ஆறுமுகசாமி தாக்கல் செய்த பொதுநல மனு:தேசிய பங்குச்சந்தை மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் இணையதள சர்வர் நேரடி இணைப்பு வசதி (கோலொகேஷன் சர்வீசஸ்) சில புரோக்கர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. இதனால் பங்குச் சந்தையில் ஏற்படும் விலை ஏற்ற, இறக்கங்களை உடனடியாக புரோக்கர்கள் அறிந்து கொள்கின்றனர். தொலைதுாரத்தில் இருப்பவர்களுக்கு ஆன்லைன் தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.'கோலோகேஷன் சர்வீஸ்' வசதி மூலம் சில புரோக்கர்கள் மட்டுமே பங்கு வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்த முடிகிறது.



மற்றவர்களுக்கு சமவாய்ப்பு மறுக்கப்படுகிறது. பாரபட்சமான 'கோலொகேஷன் சர்வீசஸ்' வசதிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு ஆறுமுகசாமி மனு செய்தார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு செபி, தேசிய பங்குச் சந்தைக்கு நோட்டீஸ் அனுப்பி ஆக.,9 க்கு ஒத்திவைத்தது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X