பெருந்தொற்றின் அழையா விருந்தாளிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:02

நாம் உண்ணும் உணவுகளின் அடிப்படையில் இயற்கைவன்மை, காலவன்மை, செயற்கை வன்மை என்ற மூன்று வகை எதிர்ப்பு சக்தி நமது உடலை நோய்க்கிருமிகள், இளவேனில் நோய்கள் மற்றும் வயோதிக நோய்களிடமிருந்து காத்துக் கொள்ள உதவுகிறது.தமிழ் மருத்துவ தத்துவபடி கோவிட் - 19 பெருந்தொற்று வளி, அழல், ஐயம் என்ற மூன்று குற்றங்களும் ஒரே நேரம் உடலில் மிகுவதால் ஏற்படுவதாக கருதலாம்.



வளி மிகுவதால் ஏற்படும் கடும் உடல்சோர்வு, தசைவலி, தலைவலி, அழல் மிகுவதால் ஏற்படும் நாவில் சுவையின்மை, மூக்கில் மணமின்மை, சுரம், ஐயம் கூடுவதால் ஏற்படும் இருமல், மூச்சுத்திணறல் ஆகியன ஒரே நேரத்திலோ அல்லது ஒன்றன் பின் ஒன்றாகவோ இந்நேரத்தில் ஏற்படுகின்றன. இதனைத் தொடர்ந்து சுவாசம் குறைதல், நாடித்துடிப்பு மிகுதல், பிராணன் என்னும் மூச்சுக்காற்றுக்கு திணறுதல் ஆகிய குறிகுணங்களை காட்டி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.பெரும்பாலும் வைரஸ் கிருமிகள் தான் உட்புகும் உறுப்பு மற்றும் வாழும் சூழலுக்கு ஏற்றவாறு தனது தகவமைப்பை மாற்றிக் கொள்கின்றன.



வாழும் இடத்தில் தன்னை பலப்படுத்திக்கொண்டு புதிய உருவில் நாம் உட்கொள்ளும் மருந்துகளை எதிர்த்து வாழும் தன்மையை விரைவில் பெற்றுவிடுகின்றன. அதனால்தான் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் கிருமித்தொற்று பழைய மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லை. மனிதர்களுக்கு இயற்கையாக தோன்றும் மந்தை எதிர்ப்புசக்தி, தடுப்பூசி, மருந்துகளின் செயல்திறனுக்கு ஏற்றவாறு கொஞ்சம் கொஞ்சமாக தனது தாக்கும் ஆற்றலை பிற்காலத்தில் இவை இழந்துவிடுகின்றன. அதுபோல எந்தவிதமான பெருந்தொற்றும் 2 முதல் 3 ஆண்டுகள் கண்டிப்பாக நீடிக்கக் கூடியவை.தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல், சமூக பரவலை தடுத்தல், கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல், சுயபாதுகாப்பு கவசங்களை அணிதல் ஆகியவற்றையும் தாண்டி நமது முன்னோர்கள் பெருந்தொற்று காலத்தில் பின்பற்றிய உணவு முறைகளை பின்பற்ற வேண்டியது தற்போதைய அவசியம் மட்டுமல்ல காலத்தின் கட்டாயமும் கூட.



பெருந்தொற்று காலத்தில் நமது பாரம்பரிய உணவு மற்றும் சுகாதாரமான வாழ்க்கை முறை அவசியம். மருந்துணவு, சமூக இடைவெளி மற்றும் சங்கிலி பிணைப்பு தொற்று அறுத்தல் மூலமாக இந்த பெருந்தொற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். கிராமங்களில் பெருந்தொற்று பரவல் குறைவாக இருப்பதன் மூலம் இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.நம்மைச்சுற்றியே நமக்கு தேவையான மருந்துகளும் உணவுகளும் கிடைக்கின்றன. வேப்பம்பூ, அகத்திபூ, வெற்றிலை, மிளகு, கிராம்பு, அதிமதுரம், சுக்கு, சிற்றரத்தை, மஞ்சள், துளசி, துாதுவளை, ஆடாதோடை என நமக்கு எளிதில் கிடைக்கும் மருந்துகளே பெருந்தொற்று காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம்மை காக்கும் மருந்துணவுகளாக விளங்குகிறது. வேம்பு, மஞ்சள், மிளகு தானே என சாதாரணமாக நினைக்கும் உணவுகளில் கூட இந்நோயை நீக்கும் ஆற்றல், எதிர்ப்பு சக்தி, ஒளிந்திருக்கலாம். என்ன காரணம்கோவிட் தொற்றில் தோன்றும் அறிகுறிகள் மற்றும் நாம் உணரும் குறிகுணங்களுக்கு நமது உடலில் உள்ள ஐயம் மற்றும் முக்குற்றங்களின் மிகுதி, குறைவு நிலையே காரணங்களாக அமைகின்றன. இவற்றின் அடிப்படையில் நமது உடலில் ஐயம் மிகும்போது பசி மந்தம், வாய்நீர் ஊறுதல், ஊக்கம் குறைதல், உடல் கனம் தோன்றுதல், உடல் தளரல், இரைப்பு, உப்பிசம், இருமல், மிகு துாக்கம் ஆகியன உண்டாகின்றன. நமது உடலில் எந்த குற்றம் மிகுந்து இருக்கிறது அல்லது குறைந்திருக்கிறது என்பதை கண்டறிந்து அதன் அதனடிப்படையில் அதற்கான உணவுகளையும் மருந்துகளையும் எடுத்துக் கொள்வது அவசியம். கோவிட் தொற்றில் கபத்தை மிகுதிப்படுத்தும் இனிப்பு, புளிப்பு, உப்பு ஆகியவற்றை உணவில் தவிர்க்க வேண்டும். அதே நேரம் கப மிகுதியை சமம் செய்யும் கார்ப்பு, துவர்ப்பு, கைப்பு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.நோயில்லாமல் வாழ மிளகு, சுக்கு, பூண்டு, உப்பு, நாட்டு சர்க்கரை, வெங்காயம், கொத்த மல்லி, கடுகு, பசும்பால், மோர், நெய், தண்ணீர், ஆட்டுப்பால், எருமைப்பால், பீர்க்கு, புடலை, தயிர், வெண்ணெய் ஆகியவற்றை குழம்பு அல்லது ரசம் செய்து நோயின் தன்மைக்கேற்ப உட்கொண்டு வந்தால் நமது உடல் பொன் போல் ஆகும் என சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.மிளகு, மஞ்சள், சீரகம், பெருங்காயம், சுக்கு, ஏலக்காய், வெந்தயம், பூண்டு ஆகியவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்ப்பதால் சன்னி எனப்படும் கபம் மிகுதி நோய்கள் தீரும்.அன்றாட உணவுகள்நெல்லிக்காய் கஞ்சி: நெல்லிக்காய், கண்டங்கத்திரி, சிற்றாமல்லி, பேராமல்லி ஆகியவற்றை கஷாயம் வைத்து அதில் குருணை அரிசி போட்டு கஞ்சி செய்து கொடுக்கலாம்.அதிமதுர கஞ்சி: அதிமதுரம், சுக்கு, வில்வ வேர், இலுப்பை வேர், சிற்றாமுட்டி ஆகியவற்றை கஷாயம் வைத்து அதில் குருணை அரிசி போட்டு கஞ்சி செய்து சாப்பிடலாம்.சுக்கு கஞ்சி: சுக்கு, மிளகு, மஞ்சள், சீரகம், பெருங்காயம், சிறுகாஞ்சொறி ஆகியவற்றை கஷாயம் செய்து அதில் நெற்பொறி போட்டு வேக வைத்து ஆறிய பின் கஞ்சியாக சாப்பிடலாம்.முடக்கறுத்தான் கஞ்சி: முடக்கறுத்தான், மஞ்சள், சீரகம், பெருங்காயம், சுக்கு ஆகியவற்றை கஷாயம் வைத்து அதில் நெற்பொறி, வெங்காயம் போட்டு வேக வைத்து ஆறிய பின் கஞ்சியாக சாப்பிடலாம்.நெல்லிக்காய் லட்டு: நெல்லிக்காய்- 10 எண்ணம், ரவை- 50 கிராம், தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி, நெய் - 50 கிராம், சீனி - கால் கிலோ, முந்திரிப்பருப்பு - 15 எண்ணம், ஏலக்காய் - தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். நெல்லிக்காயைக் கொட்டை நீக்கி, சதையை மட்டும் நன்கு அரைத்து, சாறு பிழிந்து அதன் சக்கையை மட்டும் நன்றாக உதிர்த்து வைத்துக் கொள்ளவும். தேங்காயையும் நன்கு அரைத்துக் கொள்ளவும். ரவையை சிறிது நெய் ஊற்றி பொன்நிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும். முந்திரிப்பருப்பையும் நெய்யில் வறுக்க வேண்டும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். பின்பு சீனி மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து பாகு பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும். பதம் வந்ததும் நெல்லியின் விழுதை போட்டு 2 நிமிடம் கிளறிய பின், ரவையையும், தேங்காய் துருவலையும் சேர்த்து 5 நிமிடம் கிளறவும். பின்பு வறுத்த முந்திரிப்பருப்பையும், ஏலக்காய், நெய் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளற வேண்டும். பின்பு வேறு பாத்திரத்திற்கு மாற்றி சிறிது ஆறியதும், இளஞ்சூடாக இருக்கும் பொழுது உருண்டை பிடிக்கலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்வேப்பம்பூ சட்னி: மிளகாய் வற்றல் - 2, உளுத்தம் பருப்பு - 2ஸ்பூன், எண்ணெய் - 2 ஸ்பூன், வேப்பம் பூ - 100 கிராம், புளி - நெல்லி அளவு, உப்பு - தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு வேப்பம்பூவை வறுத்துக் கொள்ளவும். மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பையும் வறுத்துக் கொள்ளவும். வேப்பம்பூ, வறுத்த மிளகாய், உளுத்தம் பருப்பு, புளி, உப்பு சேர்த்து சற்று கூடுதலாக தண்ணீர் விட்டு அரைக்கவும். இதனை இட்லி, தோசையோடு தொட்டுக் கொள்ளலாம். சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.அதிமதுரம் டீ: அதிமதுரம் - 50 கிராம், ஏலக்காய் - 4 கிராம், கிராம்பு - 4 எண்ணம். எல்லாவற்றையும் பொடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு ஸ்பூன் பொடி, கருப்பட்டி அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும். சுவையான அதிமதுரம் டீ ரெடி. சளி, வறட்டு இருமல், தொண்டைப்புண், தொண்டை வலி தீரும்.மூலிகை தேநீர்: சுக்கு - 100 கிராம், மிளகு - 10 கிராம், திப்பிலி - 10 கிராம், மஞ்சள் - 10 கிராம், ஓமம் - 5 கிராம், கிராம்பு - 5 கிராம், லவங்கப்பட்டை - 5 கிராம், ஏலக்காய் - 5 கிராம், அதிமதுரம் - 50 கிராம், சித்தரத்தை - 50 கிராம், கடுக்காய் தோல் - 50 கிராம், நெல்லி வத்தல் - 50 கிராம் ஆகியவற்றை இளவறுப்பாக வறுத்து நன்கு இடித்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். 10 கிராம் பொடியை 400 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து நூறு மில்லியாக சுண்டிய பின்பு வடிகட்டி அத்துடன் 10 மில்லி தேன் அல்லது 5 கிராம் நாட்டுசர்க்கரை கலந்து வடிகட்டி சாப்பிடலாம். சுவாச கோளறுகள் நீங்கும்.முடக்கறுத்தான் தோசை: புழுங்கல் அரிசி - 400 கிராம், துவரம் பருப்பு - 4 ஸ்பூன், வெந்தயம் - 2 ஸ்பூன், முடக்கறுத்தான் கீரை - சுத்தம் செய்த கீரை 5 கைப்பிடி அளவு, உப்பு - தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். அரிசி, பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை 3 மணிநேரம் ஊறவைத்து பிறகு கீரையையும் சேர்த்து அரைத்து தேவையான உப்பு சேர்த்து கலக்கி மாவை முதல் நாள் இரவே புளிக்க வைக்க வேண்டும். மறு நாள் காலை தோசைக்கல்லில் தோசையாக ஊற்றி பூண்டு சட்னியுடன் உண்ணலாம். கப நோய்கள், மூச்சுதிணறல் நீங்கும்.வேப்பம்பூ ரசம்: வேப்பம்பூ - அரை கப், மிளகாய் வற்றல் - 2, மிளகு - 1ஸ்பூன், சீரகம் - 2ஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, புளி - நெல்லிக்காய் அளவு, தக்காளி - 1, பச்சை கொத்தமல்லி - சிறிதளவு, நெய் 2 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். புளிகரைசலில் தக்காளி அரிந்து போட்டு சிறிது பெருங்காயத்தையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். மிளகு, சீரகத்தை நன்கு பொடித்து அதனுடன் சேர்த்து, உப்பும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து ரசம் பொங்கி இறக்கியதும் நெய்யில் கடுகு மிளகாய் வற்றல் தாளிதம் செய்து வேப்பம்பூவை நன்கு வறுத்து போடவும். பிறகு பச்சை கொத்தமல்லியை போட்டு சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும். வெறும் ரசம் டம்ளரில் ஊற்றி குடிக்கலாம்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணம் நமது உணவில் அதிமதுர பாயாசம், இஞ்சி மணப்பாகு, துளசி டீ, துாதுவளை துவையல், பூண்டு சட்டினி, முள்முருங்கை அடை, ஆடாதோடை சர்பத், சோம்பு தீநீர், இஞ்சி தேநீர், வெந்தயக் காப்பி, பட்டை குடிநீர் ஆகிய மருந்துணவுகளை அடிக்கடி உணவில் உட்கொண்டு வரலாம்.-டாக்டர். ஜெ. ஜெயவெங்கடேஷ்சித்த மருத்துவ எழுத்தாளர்மதுரை. 98421 67567

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X