விரைவில் கோர்ட் திறப்பு விழா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:05

பல்லடத்தில், அனைத்து வசதிகளுடன், 5.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கோர்ட் கட்ட தீர்மானிக்கப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கின. பணிகள் முடிந்து, தற்போது கோர்ட் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. வக்கீல்கள் கூறுகையில், 'தேர்தல் அறிவிப்பு வெளியானதால், கோர்ட் திறப்பு விழா நடக்கவில்லை. தற்போது, கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்து கோர்ட் தயார் நிலையில் உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பின், திறப்பு விழா குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்,' என்றனர்.ரூ.3.53 லட்சம் கருப்பட்டி ஏலம்குன்னத்துார் கூட்டுறவு சங்கத்தில் நேற்று கருப்பட்டி ஏலம் விடப்பட்டது. இதில், பனங்கருப்பட்டி கிலோ, 139 ரூபாய், 20 பைசா வீதம் ஒரு டன் கருப்பட்டி ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து, 200 ரூபாய்க்கும், தென்னங்கருப்பட்டி கிலோ, 107 ரூபாய் வீதம் இரண்டு டன் கருப்பட்டி, 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் என மொத்தம், 3 லட்சத்து, 53 ஆயிரத்து, 200 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. ஏலத்தை, கருப்பட்டி கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர் மருதமுத்து, தலைவர் பொன்னுசாமிஆகியோர் நடத்தினர்.தி.மு.க., செயற்குழு கூட்டம்திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கிருமிநாசினி, முக கவசம், கபசுர குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை மையத்தில், 24 மணி நேரமும் தொடர்ந்து பாதுகாப்புக்கு, சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.குப்பைக்கு போன அரளி பூக்கள்திருப்பூர் பூ மார்க்கெட்டில், ஒரு கிலோ அரளி (கதம்பம்), 20 ரூபாய்க்கு விற்ற போதும், வாங்கி செல்ல ஆளில்லாததால், குப்பை வண்டியில், வியாபாரிகள் கொட்டினர். பூ வியாபாரிகள் கூறுகையில், 'சித்திரையில் பூ விலை குறைவது வழக்கம் தான். இம்முறை அரளி வரத்து அதிகம். கிலோ, 20 ரூபாய்க்கு விற்றாலும், வழக்கமாக வாங்கும் சிறு வியாபாரிகளே எங்களிடம் குறைவாகவே வாங்கி செல்கின்றனர். இருப்பு வைக்க முடியாததால், குப்பையில் கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது,' என்றனர்.தடுப்பூசி மருந்து; மக்கள் ஏமாற்றம்வெள்ளகோவில் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் இதுவரை, 5 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி மருந்து இல்லை. இதனால், திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் இருந்து 'கோவாக்ஸின்' 50 டோஸ் மட்டுமே வந்தது. தடுப்பூசி செலுத்த வந்தவர்களில், 50 பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டது. எஞ்சியவர்களுக்கு, தடுப்பூசி மருந்து வந்தவுடன் செலுத்தப்படும் என சுகாதார துறையினர் தெரிவித்ததால், மக்கள் கலைந்து சென்றனர்.மரக்கன்றுகள் நட்டு அஞ்சலிபொங்கலுார், தேவணம்பாளையம் சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், மறைந்த நடிகர் விவேக் நினைவாக பல இடங்களில் மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மன்ற செயலாளர் சிவக்குமார், துணைப் பொருளாளர் தமிழரசன், நிர்வாக குழு உறுப்பினர் ரகுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். அவரின் நினைவாக, தொடர்ந்து மரக்கன்று நட்டு, பராமரிக்கப்படும் என, நற்பணி மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.மின் பிரச்னை: தொழில்துறை கவலைபொங்கலுார் பகுதியில் பனியன் நிறுவனங்கள், விசைத்தறிகள், ஒர்க் ஷாப், ரைஸ் மில், ஆயில் மில், நுால் மில் இயங்கி வருகின்றன. இருமுனை மின்சாரமே வழங்குவதால், புதிய தொழில் முனைவோர் இப்பகுதியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏப்., 1 முதல் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. சில நாட்கள் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மும்முனை மின்சாரம் வழங்க வேண்டுமென, தொழில் நிறுவனத்தினர் எதிர்பார்த்துள்ளனர்.தி.மு.க., சார்பில் கபசுர குடிநீர்பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், கபசுர குடிநீர் மற்றும் நீர்மோர் வழங்கும் பந்தல் திறக்கப்பட்டது. கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் சோமசுந்தரம் துவக்கி வைத்தார். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கீர்த்தி சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். அருள்புரம் தண்ணீர்பந்தல் பஸ் ஸ்டாப்பில் அமைக்கப்பட்ட பந்தலில், கபசுர குடிநீர், நீர்மோர், மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டன. ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் சின்னப்பன், நடராஜ், தங்கவேல், துரைசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.மக்கள் கூட்டம் குறையவில்லைகொரோனா தொற்று அச்சுறுத்தும் இந்நிலையிலும், பொதுமக்கள் கோரிக்கை மனுவுடன் கலெக்டர் அலுவலகம் வருகின்றனர். மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளதால், தங்களது அத்தியவாசிய பிரச்னைக்கு தீர்வு கேட்டு, மக்களும் மனு கொடுக்க வருகின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், திருப்பூருக்கு வர வேண்டும் என்பதால், தொலைபேசி வாயிலாக, குறைகளை கேட்டு, தீர்வு வழங்கலாம்.13 பேருக்கு கொரோனாவெள்ளகோவில், சுற்றுப்பகுதிகளில், 13 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கே.பி.சி., நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட 13 பேர், திருப்பூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அவிநாசி மகாராஜா கல்லுாரி சிறப்பு வார்டு ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிக்கப்பட்ட மில், சாமுண்டி பிஸ்கட் பேக்டரி, உப்புப்பாளையம் ரோட்டில், நகராட்சி ஆய்வாளர் சரவணன் தலைமையில் துப்புரவு தொழிலாளர்கள் கிருமிநாசினி தெளித்து, அப்பகுதிகளை தனிமைப்படுத்தி உள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X