மழையால் பயிர் சேதம்: விவசாயிகள் கண்ணீர் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
மழையால் பயிர் சேதம்: விவசாயிகள் கண்ணீர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:06

திருப்பூர்:இரண்டு நாட்கள் பெய்த பலத்த மழையால், பல இடங்களில் தீவனப் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. திருப்பூர் அருகேயுள்ள கரைப்புதுார், கணபதிபாளையம், அவரப்பாளையம், அல்லாளபுரம், குப்புச்சிபாளையம், நொச்சிபாளையம் உட்பட கிராமங்களில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில், மக்காச்சோளம், மஞ்சள் சோளம் பயிரிடப்பட்டுள்ளன.கடந்த இரு நாட்கள் திருப்பூர் சுற்றுப்பகுதியில் பெய்த பலத்த மழையால், விவசாய நிலங்களில் பயிர்கள் முற்றிலும் சாய்ந்து வீணாகி விட்டன. இதனால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். வேளாண் துறை மற்றும் வருவாய் துறையினர் உரிய ஆய்வு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X