ரோந்து போலீசார் விழிப்புணர்வு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
ரோந்து போலீசார் விழிப்புணர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:07

பல்லடம்:ரோட்டில் நடந்து சென்றாலும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என, பல்லடத்தில் ரோந்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையில், பல்வேறு அரசு துறை ஊழியர்களும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, போலீசாரும் இப்பணியில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். பல்லடத்தில் ரோந்து பணி மேற்கொண்டு வரும் போலீசார், பொதுமக்களுக்கு நோய்த்தடுப்பு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.முக கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. உடனே, இது வாகன ஓட்டிகளுக்கு மட்டும்தான்; நடந்து செல்பவர்களுக்கு கிடையாது என்று நினைக்க வேண்டாம். ரோட்டில் நடந்து செல்பவர்களும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். அரசு விதித்துள்ள தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்றுங்கள் என, ரோந்து போலீசார் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X