திறனறிதல் புத்தக வினியோகம் சமூக இடைவெளியின்றி ஆசிரியர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:25

பல்லடம்:பல்லடத்தில், நோய் தொற்று பரவலையும் பொருட்படுத்தாமல், திறனறிதல் பயிற்சி புத்தகம் பெற ஆசிரியர்கள் ஒரே இடத்தில் குவிந்தனர்.தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு திறனறிதல் பயிற்சி புத்தகம் இன்று வினியோகிக்கும் பணி நடந்தது.அரசு துவக்க, நடுநிலை பள்ளிகளுக்கான புத்தகம் வினியோகிக்கும் பணி, பல்லடம் ப.வடுகபாளையம் நகராட்சி பள்ளியில் நேற்று துவங்கியது.நோய் தொற்று பரவலையும் பொருட்படுத்தாமல் ஆசிரியர்களும், பெற்றோரும் பள்ளியில் குவிந்தனர். ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களை வரவழைக்காமல், நேரம் நிர்ணயித்து புத்தகங்களை பிரித்து கொடுத்திருக்கலாமே என, பெற்றோர் சிலர் புலம்பியபடி சென்றனர்.ஆசிரியர்களிடம் கேட்டதற்கு, 'புத்தகங்கள் வந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது. திடீரென, 20ம் தேதிக்குள் வினியோகிக்கப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.இதனால் அனைத்து பள்ளி ஆசிரியர்களும் புத்தகங்களை எடுத்து செல்ல வருமாறு கூறினர். அதன்படி, அனைவரும் காலை 10.00 மணிக்கு வந்தோம்,' என்றனர்.ஒரே நேரத்தில் ஆசிரியர்கள் கூடியது, கொரோனா தொற்று பரவலுக்கு வழிவகுத்து விடும் என, சுகாதார துறையினர் எச்சரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X