மெய்த்தன்மை சான்றுக்கு லஞ்சம்? தாலுகா ஆபீசில் மா.கம்யூ., நிர்வாகி தர்ணா | திருப்பூர் செய்திகள் | Dinamalar
மெய்த்தன்மை சான்றுக்கு லஞ்சம்? தாலுகா ஆபீசில் மா.கம்யூ., நிர்வாகி தர்ணா
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:26

திருப்பூர்:ஊத்துக்குளி தாசில்தார், 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறி, மா.கம்யூ.. நிர்வாகி, தாலுகா அலுவலகத்தில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஊத்துக்குளி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி; இவர், மா.கம்யூ., கிளை செயலாளர். இவரது தாயார் சின்னம்மாள் பெயரில் உள்ள நிலத்துக்கு, மெய்த்தன்மை சான்று கேட்டு, தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.ஆனால், அதற்கு 25 ஆயிரம் ரூபாய் அதிகாரிகள் கேட்பதாக கூறி, தர்ணாவில் ஈடுபட்டார். அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து, ஆர்.டி.ஓ., அலுவலகம் வாயிலாக சான்று பெற்றுக்கொள்ளலாம் என, அனுப்பி வைத்தனர்.பெரியசாமி கூறுகையில், ''மெய்த்தன்மை சான்று வழங்க, தாசில்தார் கள ஆய்வு நடத்தினார். இருப்பினும், சான்று வழங்க, டிரைவர் மூலமாக லஞ்சம் கேட்டார். கொடுக்காவிட்டால், ஆர்.டி.ஓ.,வுக்கு அனுப்பி விடுவேன் என்கிறார்,'' என்றார்.தாசில்தார் கலாவதியிடம் கேட்டதற்கு, ''பல கட்ட ஆய்வுக்கு பின், ஆர்.டி.ஓ., உத்தரவை பெற்று தான் வழங்க முடியும். அதற்காக, நேற்று (நேற்று முன்தினம்) ஆர்.டி.ஓ., அனுமதிக்காக பரிந்துரை செய்துள்ளேன்.ஆனால், தாசில்தாரே சான்றிதழ் வழங்க வேண்டுமென மனுதாரர் வற்புறுத்தினார். அந்த நடைமுறையில் முடியாது என்றதால், லஞ்சம் கேட்டதாக வதந்தி பரப்பினார். இது இறித்து, ஆர்.டி.ஓ.,விடம் புகார் அளிக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X