இரவில் பஸ் ஸ்டாண்ட்டுகளை மூடுங்கள்! அலுவலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:33

கோவை:இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தும் வகையில், கோவையில் உள்ள அனைத்து பஸ் ஸ்டாண்ட்டுகளையும் இரவு, 10:00ல் இருந்து, அதிகாலை, 4:00 மணி வரை பூட்டி வைக்க, கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.கொரோனா தொற்று இரண்டாவது அலை படுவேகமாக பரவி வருகிறது. 'கொடிசியா' வளாகத்தில் ஒரு அரங்கு முழுவதும், நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு அரங்கில் படுக்கை வசதி செய்யும் பணி நடந்து வருகிறது. மேற்கு மண்டலத்துக்கு உட்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், வேளாண் பல்கலை விடுதி தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.தொற்று பரவல் வேகத்தை குறைக்கும் வகையில், இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. துணை கமிஷனர், நகர் நல அலுவலர், உதவி கமிஷனர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள் பங்கேற்றனர்.அதில், கமிஷனர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லுார், மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் ஆம்னி பஸ் ஸ்டாண்டுகளை, இரவு, 10:00ல் இருந்து மறுநாள் அதிகாலை, 4:00 மணி வரை மூட வேண்டும். அவசர மற்றும் மருத்துவ தேவைக்கு மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.ஞாயிற்றுக்கிழமை இறைச்சி, மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட், சினிமா தியேட்டர் உள்ளிட்ட எவ்வித கடைகளும் திறக்கக்கூடாது.ஓட்டல்களில் பார்சல் சேவையை மட்டும் அனுமதிக்க வேண்டும். திருமண நிகழ்ச்சி, துக்க நிகழ்வுகளுக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டும், உறவினர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.மூன்று வீடுகளுக்கு மேல் நோய் பாதிப்பு இருந்தால், அவ்வீதியை தனிமைப்படுத்திய பகுதியாக அறிவித்து, தொற்று கண்டறியும் பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும்.வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக கூறியிருப்பவர்களை, கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வீடு, வீடாக நோய் கண்டறியும் சர்வே எடுத்து, பதிவேடு பராமரிக்க வேண்டும்.ஒவ்வொரு மண்டலத்திலும் நாளொன்றுக்கு, 20 மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். வீதி வாரியாக தொற்று பாதித்த பகுதிகளை, மண்டல சுகாதார அலுவலர்கள் கண்காணிப்பது அவசியம். தடுப்பூசி முகாம்களை தொய்வின்றி நடத்த வேண்டும்.இவ்வாறு, கமிஷனர் அறிவுறுத்தினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X