வந்தது ஐந்தாயிரம் டோஸ் தடுப்பூசி: தனியார் மருத்துவமனைகளில் நெருக்கடி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வந்தது ஐந்தாயிரம் டோஸ் தடுப்பூசி: தனியார் மருத்துவமனைகளில் நெருக்கடி
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:35

கோவை:கோவை மாவட்டத்துக்கு, ஐந்தாயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து மட்டும் வந்தது. அவற்றில் ஒன்று கூட, தனியார் மருத்துவமனைக்கு வழங்கப்படவில்லை. அனைத்தும் அரசு சுகாதார நிலையங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டன.கோவை மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்று, ஐந்தாயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது. அவை அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கும், மாநகராட்சி மற்றும் நகராட்சி மருத்துவ மையங்களுக்கும், பகிர்ந்து அளிக்கப்பட்டன.தடுப்பூசி கேட்டு, கோவை சுகாதாரத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்திலுள்ள பதிவேட்டில் பதிவு செய்து காத்திருந்த, தனியார் மருத்துவமனை ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அம்மருத்துவமனைகளில் இரண்டாம் டோஸ் கேட்டு வந்தவர்களுக்கு, தடுப்பூசி போட முடியவில்லை.இது குறித்து, சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், 'போதுமான தடுப்பூசி மருந்து கையிருப்பு இல்லை. நாளை( இன்று) 50,000 முதல் ஒரு லட்சம் டோஸ்கள் வரை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வந்தவுடன் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.மருந்து நிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள, அரசு விதிவிலக்கு அறிவித்திருப்பதால், ஓரிரு நாட்களில் நெருக்கடி சரியாகி விடும் விடும்.அதன் பின், இங்கு பின்பற்றப்படும் ரேஷன் முறையும் நிறுத்தப்படும்' என்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X