'கொரோனா நெகட்டிவ்' சான்று போலியாக தயாரித்தவர் கைது | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
'கொரோனா நெகட்டிவ்' சான்று போலியாக தயாரித்தவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:39

கிருஷ்ணகிரி:'ஆன்லைன் டிக்கெட் புக்கிங்' அலுவலகத்தில், போலியாக கொரோனா, 'நெகட்டிவ்' சான்று தயாரித்து, விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.



கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சத்தலப்பள்ளியைச் சேர்ந்தவர் தினேஷ், 29; இவர், பர்கூரில், 'ஆன்லைன் புக்கிங்' அலுவலகம் நடத்தி, ரயில், விமானம், சொகுசு பஸ்களில், 'டிக்கெட் புக்கிங்' செய்து கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அவர், கொரோனா நெகட்டிவ் சான்றிதழை போலியாக தயாரித்து, அரசு மருத்துவர் கையெழுத்து, மருத்துவமனை 'சீல்' ஆகியவற்றுடன் பலருக்கு கொடுத்துள்ளார்.



பர்கூர் கிரானைட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஏராளமான வடமாநிலத்தவர்கள், ரயில் பயணத்துக்காக, இவரிடம் போலி சான்றிதழுடன், டிக்கெட் புக்கிங் செய்துள்ளனர். இது குறித்து, பர்கூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் கலையரசி, பர்கூர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து, தினேஷை கைது செய்தார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X