போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:40

கோவை:போக்குவரத்துக் கழக விடுப்பு விதிகளை மாற்றக்கூடாது, தொழிலாளர் துறை அறிவுரைகளை மீறக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.பஸ்களை பராமரிக்க போதுமான உதிரி பாகங்கள் வழங்கப்படாத நிலையில், பஸ்கள் 'பிரேக் டவுன்' ஆகி நின்றால், தொழிலாளர்களை தண்டிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன, உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.உக்கடம், சுங்கம் என முக்கிய பணிமனைகள் முன்பு, தொ.மு.ச., சி.ஐ.டி.யு., உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X