மொபைல் போன் திருட்டு மாணவர் தற்கொலை | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
மொபைல் போன் திருட்டு மாணவர் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:40

சங்கராபுரம்:சங்கராபுரம் அருகே, மர்ம நபர் மொபைல் போனை பறித்துச் சென்றதால் அதிர்ச்சியடைந்த மாணவர், பெற்றோருக்கு பயந்து, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.



கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த முக்கனுாரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மணிகண்டன், 14; தேவபாண்டலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம், மணிகண்டன், அதே ஊரில் உள்ள கூத்தாண்டவர் கோவில் அருகில், மொபைல் போனில், 'ஆன்லைனில்' பாடம் படித்துக் கொண்டிருந்தார்.அப்போது, அவ்வழியாக, 'பைக்'கில் வந்த மர்ம நபர், மணிகண்டனிடம் சென்று, அவசரமாக ஒருவரிடம் போனில் பேச வேண்டும் எனக் கூறி, மொபைல் போனை வாங்கினார்.



போனில் பேசுவது போல் நடித்து, பைக்கில் வேகமாக சென்று விட்டார்.அதிர்ச்சியடைந்த மணிகண்டன், தந்தை திட்டுவார் என அச்சமடைந்தார். இதனால், வீட்டிலிருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார்.அலறல் கேட்டு, அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு, சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, சென்னை போகும் வழியில், மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X