தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு: நிர்வாக கோளாறால் பற்றியெரியுது சம்பள பிரச்னை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:41

கோவை:கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 4 வார்டுகளில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு, மார்ச் மாத சம்பளம் இன்னும் வழங்காததால், நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை மாநகராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, கலெக்டர் நிர்ணயித்த தினக்கூலியாக, நாளொன்றுக்கு ரூ.450 வழங்க வேண்டும்.ஆனால், ரூ.375 மட்டுமே வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில், ரூ.675 வழங்கப்படுகிறது. அதன்படி, சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென, ஒப்பந்த தொழிலாளர்கள் கோரி வருகின்றனர்.சமீபகாலமாக, மாதாந்திர சம்பளமே தாமதமாகி வருகிறது. மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 16, 17, 18, 19வது வார்டுகளில், வீரகேரளம் மற்றும் வடவள்ளி பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், மலேரியா, டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், ஓட்டுனர், கிளீனர்களுக்கு கடந்த மார்ச் மாத சம்பளம் வழங்கப்படவில்லை.அத்தொழிலாளர்கள், தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்க பொது செயலாளர் செல்வம், துணை பொது செயலாளர் மருதாசலம் ஆகியோர் தலைமையில், நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.காலை, 9:00 மணி வரை குப்பை அள்ளும் பணிக்குச் செல்லாமல், வார்டு அலுவலகத்தில் திரண்டு நின்றிருந்தனர்.அவர்களிடம், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் பேச்சு நடத்தினார். இன்று மாலைக்குள் அனைவருக்கும் சம்பளம் வழங்கப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து, பணிக்குச் சென்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X