மின்கசிவால் வீட்டில் தீ விபத்து | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
மின்கசிவால் வீட்டில் தீ விபத்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:42

வடவள்ளி:பொம்மண்ணம்பாளையம், ஆர்.ஆர்., அவென்யூவை சேர்ந்தவர், ராமகிருஷ்ணன். நேற்று காலை, 11:30 மணிக்கு, இவரது வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் இருந்து, கரும்புகை வந்துள்ளது. இதனை கண்ட அருகில் இருந்தோர், உடனடியாக, ராமகிருஷ்ணனையும், அவரது மனைவியையும் வீட்டிற்கு வெளியே அழைத்து வந்தனர்.தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர்.இதில், வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. ஏ.சி.,யில் ஏற்பட்ட மின் கசிவால், தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X