கணவர்களை கொன்ற 'தர்மபத்தினி'கள் கைது | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
கணவர்களை கொன்ற 'தர்மபத்தினி'கள் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:44

கள்ளக்குறிச்சி:கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.



கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த வீ.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 40; விவசாயி. மனைவி செல்வி, 35. இவர்களுக்கு, 15 - 13 வயதில் மகன், மகள் உள்ளனர்.சுப்பிரமணி, 16ம் தேதி வீட்டில், மீதம் இருந்த மதுவை குடித்தார். அப்போது, உடல் நிலை பாதித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அன்று இரவே இறந்தார்.போலீஸ் விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவனை கொலை செய்ததை செல்வி ஒப்புக்கொண்டார்.



அவரது வாக்குமூலம்: எனக்கும், ஜெயமுருகன், 43 என்பவருக்கும், சில ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு உள்ளது. இதையறிந்த கணவர், கண்டித்தார். அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தோம். கடந்த, 15ம் தேதி, ஜெயமுருகன் பூச்சி மருந்து வாங்கி கொடுத்தார். என் கணவர் குடித்து மீதம் வைத்த மதுவில், அதை கலந்தேன். அதை குடித்து, அவர் இறந்தார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.செல்வி, ஜெயமுருகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.



மற்றொரு சம்பவம்



கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள நெகமம், சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ், 37; திருமணமாகி மனைவியை இழந்தவர். அதே பகுதியைச் சேர்ந்த அமுதா, 36, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன், இருவரும் திருமணம் செய்துள்ளனர்.



கோவை, மதுக்கரையில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இங்கு, துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சங்கர், 32, என்பவரும் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை சங்கர், தொழிற்சாலை உரிமையாளரை தொடர்பு கொண்டு, நாகராஜ் மண் மூடப்பட்ட நிலையில், இறந்து கிடப்பதாக கூறியுள்ளார்.மதுக்கரை போலீசார், சங்கரிடம் நடத்திய விசாரணையில், அமுதா உதவியுடன், நாகராஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.



சங்கர் - அமுதா இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. நேற்று முன்தினம், சங்கர் அறையில், இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். நள்ளிரவில் வந்த நாகராஜ், வாக்குவாதம் செய்து உள்ளார். அப்போது, நாகராஜை கீழே தள்ளிய சங்கர், சுத்தியலால் தலையில் அடித்துள்ளார். அமுதா கால்களை பிடித்துக் கொள்ள, அவரது நெஞ்சில் சுத்தியலால் பலமாக அடித்துள்ளார். பின், கழுத்தை நெரித்துள்ளனர். இதில், நாகராஜ் உயிரிழந்தார்.பின், கட்டடம் கட்ட தோண்டியிருந்த குழியில் சடலத்தை கிடத்தி, மண் போட்டு மூடியுள்ளனர். போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X