'இன்கோ' தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு தடுப்பூசி | நீலகிரி செய்திகள் | Dinamalar
'இன்கோ' தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு தடுப்பூசி
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:44

கோத்தகிரி:கோத்தகிரி கட்டபெட்டு 'இன்கோ' தொழிற்சாலையில், கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் 'இன்கோசர்வ்' முதன்மை செயலர் சுப்ரியா சாஹூ ஆகியோர் முன்னிலையில், தொழிற்சாலை ஊழியர்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர்.பின், நிருபர்களுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அளித்த பேட்டி:கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் 'டெஸ்டிங் மிஷின்' இந்தவாரம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.திருமணம், துக்க நிகழ்ச்சிகளை வருவாய் துறை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் கண்காணிக்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்தந்த இடத்திற்கு சென்று தடுப்பூசி போடப்படுகிறது. அதன்படி, 920 தொழிலாளர்கள் பணிபுரியும் இன்கோ தொழிற்சாலைகளில், 420 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படும்.சுற்றுலா தேவைக்காக, வாகனங்கள் மாவட்டத்திற்குள் வரமுடியாது. அதே நேரத்தில், மாவட்ட எல்லைகள் திறக்கப்பட்டு மற்ற வாகனங்கள் வந்து செல்கின்றன.மற்ற மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருவதால், தேவையில்லாத பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் இன்னசென்ட்திவ்யா கூறினார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X