பாறையின் மீது அமர்ந்த சிறுத்தை: வனத்துறை கண்காணிப்பு பணி | நீலகிரி செய்திகள் | Dinamalar
பாறையின் மீது அமர்ந்த சிறுத்தை: வனத்துறை கண்காணிப்பு பணி
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:46

குன்னுார்:குன்னுார் அட்டடி பகுதியில் பாறையின் மீது அமர்ந்திருந்த சிறுத்தையை மக்கள் பார்த்து வியப்படைந்தனர்.குன்னுார் அட்டடியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இந்நிலையில், நேற்று அட்டடி கிராமம் தேயிலை தோட்டம் அருகில் உள்ள பாறையின் மீது, சிறுத்தை அமர்ந்து ஓய்வெடுத்து கொண்டிருந்தது. மூன்று மணி நேரத்திற்கும் மேல் அந்த சிறுத்தை அங்கிருந்து நகரவில்லை. இதனை மக்கள் பார்த்து வியப்படைந்தனர். வனவிலங்கு ஆர்வலர்கள் பலர் 'போட்டோ' எடுத்தனர். தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு வந்து, இடையூறு ஏற்படாமல் இருக்க, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X