தடுப்பூசி பற்றிய வீண் வதந்திகளை நம்பாதீர்கள்! கோவை டாக்டர்கள் அறிவுரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

21 ஏப்
2021
11:12
பதிவு செய்த நாள்
ஏப் 21,2021 00:50

கோவை;'கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். கொரோனா தடுப்பூசி ஆபத்தானது அல்ல; அவசியமான ஒன்று' என கோவை டாக்டர்கள் கூறியுள்ளனர்.கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில், தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து, பல் துறை மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:


ஒரே தீர்வு தடுப்பூசி!




சாமிநாதன், பொது மருத்துவ துறை தலைவர், கோவை அரசு மருத்துவமனை: கொரோனா என்ற கொடிய வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இருமுறை மரபு மாற்றம் அடைந்த வைரஸ் (டபுள் மியூட்டன்ட் வைரஸ்) என்பதால், வேகமாக பரவும் தன்மை கொண்டது. அதிலும், இணை நோய் இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், தீவிரமாக பாதிக்கப்படுகின்றனர். தனி மனித பாதுகாப்புக்கு அடுத்தபடியாக இதற்கு ஒரே தீர்வு, தடுப்பூசி மட்டுமே. மத்திய, மாநில அரசுகள் இதை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன.தடுப்பூசி போடுவதால், இறப்பு சதவீதம் குறைகிறது. மேலும், நோய் தொற்று ஏற்பட்டாலும், பெரியளவில் பாதிப்புகள் உண்டாக்குவதில்லை. அதேசமயம், தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக, தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், இணை நோய்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.



பக்கவிளைவுகள்இல்லை!




பூமா, குழந்தைகள் நல துறை தலைவர், கோவை அரசு மருத்துவமனை: கொரோனாவுக்கு முன், 1940களில் உலகையே அச்சுறுத்திய, 'ஸ்பேனிஷ் ப்ளூ', அதன்பின் வந்த 'ஸ்வைன் ப்ளூ' போன்ற பல்வேறு கொடிய வைரஸ்களை கட்டுப்படுத்த முக்கிய காரணமாக இருந்தது தடுப்பூசிகள்தான். எனவே, கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தற்போது, அரசே, 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. சர்க்கரை, இருதய நோய் உள்ளவர்கள் போட்டுக்கொள்ளலாம். ஒருவேளை, வேறு ஏதேனும் பிரச்னை இருந்தால், மருத்துவர்களின் ஆலோசனை கேட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை, 40 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. யாருக்கும், பக்கவிளைவுகள் ஏற்படவில்லை.



வதந்திகளை நம்ப வேண்டாம்!




வெங்கடேஷ், மூளை நரம்பியல்தண்டுவட அறுவை சிகிச்சை துறை தலைவர், கோவை அரசு மருத்துவமனை: தற்போதைய சூழலில், தடுப்பூசியின் பயனை காட்டிலும், அதனால் ஏற்படும் சிறிய விளைவுகளைதான் அதிகம் மிகைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதனால் பக்க விளைவுகள் இல்லை. எனவே, தடுப்பூசி போட்டுக் கொண்டால், உடல் நலம் பாதிக்கப்படும் என கூறும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தைரியமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.



இரண்டு தடுப்பூசிகளும் சிறந்தது




!அலி சுல்தான், காது மூக்கு தொண்டை துறை தலைவர், கோவை அரசு மருத்துவமனை: நானும் என் குடும்பத்தினரும் தடுப்பூசி போட்டுக் கொண்டோம். கடந்த சில தினங்களுக்கு முன், பரிசோதனை செய்து பார்த்ததில், நோய் எதிர்ப்பு சக்தி நிறையவே அதிகரித்திருந்ததை பார்க்க முடிந்தது. தற்போதுள்ள இரண்டு தடுப்பூசிகளில் எதுவாக இருந்தாலும், போட்டுக் கொள்ளலாம். ஆனால், முதல் முறை எந்த தடுப்பூசி பயன்படுத்துகிறோமோ, இரண்டாம் தவணையின்போதும் அதே தடுப்பூசிதான் பயன்படுத்த வேண்டும்.



டாக்டர்களிடம் கேளுங்கள்!




அருள்செல்வன், குடல் இரைப்பை மற்றும் கல்லீரல் மருத்துவ உதவி பேராசிரியர், கோவை அரசு மருத்துவமனை: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால், சிலருக்கு உடல் அசதி, ஒன்று இரண்டு நாட்கள் காய்ச்சல் வரலாம். இதுதவிர, பெரிய அளவில் பக்கவிளைவுகள் ஏற்படாது. உடலில் பெரிய அளவில் பாதிப்புகள் இருப்பவர்களும், டாக்டர்களின் ஆலோசனை கேட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். அதேபோல், கல்லீரல் சுருக்கம், வயிறு வீக்கம், நீண்ட நாட்கள் மாத்திரைகள் சாப்பிடுபவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதுபோன்ற நோயாளிகளும், டாக்டர்களின் அறிவுரை கேட்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.



இணைநோய் கவலை வேண்டாம்!




மோனி, மூத்த மனநலமருத்துவர், பாலாஜி மூளைநரம்பியல் மற்றும் மன நல மருத்துவ மையம்: எனக்கு சர்க்கரை, ரத்த கொதிப்பு, கொழுப்பு சத்து போன்ற இணை நோய்கள் இருக்கின்றன. இதற்காக, தினமும் மாத்திரைகள் சாப்பிடுகிறேன். தடுப்பூசி போட்ட பின் எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை. மேலும், என்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் நிறைய பேர் தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இணைநோய் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். சமூக வலைதளங்களில் தடுப்பூசி குறித்து வரும், வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X