'அரசியல்வாதிகளின் அதிகார பசிக்கு தேர்தல்ஆணையம் இரையாகக் கூடாது' | தூத்துக்குடி செய்திகள் | Dinamalar
'அரசியல்வாதிகளின் அதிகார பசிக்கு தேர்தல்ஆணையம் இரையாகக் கூடாது'
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:50

துாத்துக்குடி:''அரசியல்வாதிகளின் அதிகார பசிக்கு தேர்தல் ஆணையம் இரையாகிவிடக்கூடாது,'' என புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மேலும் கூறியதாவது:தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டுள்ள இந்த தேர்தலின் ஓட்டு எண்ணிக்கையை ரத்து செய்யக்கோரி நாளை (ஏப்.22) சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொள்கிறோம். நீதிமன்றத்திற்கும் செல்ல உள்ளோம். இதற்கு ஆதரவாக உள்ளவர்கள் பங்கேற்கலாம். வாக்குகளை விற்பது, கிடைத்த சுதந்திரத்தை விற்பதற்கு சமம். இது ஜனநாயகத்திற்கு பேராபத்து. ஒரு தொகுதியில் 25 கோடி ரூபாய் செலவழிப்பவர்கள், 100 கோடி ரூபாயை சட்டவிரோதமாக திரும்ப சம்பாதிப்பார்கள். தமிழகத்தில் உள்ள 36 ஆயிரத்து 850 கோயில்களின் சொத்துக்கள், நிலங்கள் யாரிடம் உள்ளன என்பது குறித்து தமிழக அரசு வெள்ளையறிக்கை விடவேண்டும். 2.5 கோடி சதுர மீட்டர் கோயில் கட்டடங்களை மீட்கவேண்டும், என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X