குறைந்த எண்ணிக்கையில் ஆம்னி பஸ்கள் ஓடும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
00:52

சென்னை:தமிழகத்தில், 4,000 ஆம்னி பஸ்கள் உள்ளன. இவை, தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரிக்கும் இயக்கப்படுகின்றன.கடந்தாண்டு ஊரடங்கு அமலான நிலையில், எட்டு மாதங்கள் ஆம்னி பஸ்களை இயக்கவில்லை. இந்தாண்டு ஜனவரிக்கு பின், 600 பஸ்கள் வரை இயக்கப்பட்டன. இந்த மாதம், கொரோனா பரவல் அதிகரித்ததால், 160க்கும் குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் ஆம்னி பஸ்களுக்கு பயணியரிடம் வரவேற்பு பெரிதாக இருக்காது என்பதால், ஊரடங்கு முடியும் வரை பஸ்களை இயக்க போவதில்லை என, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஒரு தரப்பினர் அறிவித்தனர்.மற்றொரு தரப்பினர், 'ஆம்னி பஸ்களை இயக்கும் உரிமையாளர்களை தடுக்கக்கூடாது' என்றனர்.இதையடுத்து, நேற்று மாலை நடந்த, ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில், பயணியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குறைந்த அளவில் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X