'கன்டெய்னர்' லாரி திறப்பு: எதிர்க்கட்சியினர் ஏமாற்றம் | கடலூர் செய்திகள் | Dinamalar
'கன்டெய்னர்' லாரி திறப்பு: எதிர்க்கட்சியினர் ஏமாற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
01:01

விருத்தாசலம்:விருத்தாசலத்தில், ஓட்டு எண்ணும் மையம் அருகே நிறுத்தப்பட்ட கன்டெய்னர் லாரியின், 'சீல்' அகற்றப்பட்டு திறக்கப்பட்டது. அதற்குள் தேங்காய் நார் பண்டல்கள் மட்டுமே இருந்ததால், எதிர்க்கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி ஓட்டு எண்ணும் மையம் அருகே, நேற்று முன்தினம் மாலை, கன்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. தி.மு.க., மாவட்டச் செயலர் கணேசன் எம்.எல்.ஏ., காங்., வேட்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வந்தனர்.கன்டெய்னர் லாரியை திறந்து காட்டும்படி, லாரி டிரைவர் மற்றும் ஓட்டு எண்ணும் மைய பாதுகாப்பு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள், லாரியை பார்வையிட்டு விசாரித்தனர்.பொள்ளாச்சியில் இருந்து, தேங்காய் நார் பண்டல்கள் ஏற்றிய லாரி, சென்னை துறைமுகத்தில் இருந்து, கப்பல் வழியாக, சீனாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.அதற்காக, பொள்ளாச்சியில் கஸ்டம்ஸ் அதிகாரிகளால், 'சீல்' வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.மேலும், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லுாரி நகரில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒலிவியர் ராஜ், 33, என்பவர், கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்துள்ளார். அவர், குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக, லாரியை நிறுத்திச் சென்றது தெரிந்தது.நேற்று மாலை, 6:30 மணியளவில், தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன்குமார் முன்னிலையில், கன்டெய்னர், 'சீல்' அகற்றி திறக்கப்பட்டது. அதில், 'இம்போர்டட்' தேங்காய் நார் பண்டல்கள் இருந்தது தெரிந்தது. பின், கன்டெய்னர் மூடப்பட்டு, சென்னை துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X