ஊரடங்கை அமல்படுத்த போலீசார் நடவடிக்கை | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
ஊரடங்கை அமல்படுத்த போலீசார் நடவடிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
05:18

திண்டுக்கல் : இரவு ஊரடங்கை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் தேவையான முன்னேற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் நேற்று இரவு முதல் ஊரடங்கும், ஞாயிறன்று பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.



இதையடுத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.இது குறித்து எஸ்.பி., ரவளிப்பிரியா தெரிவித்ததாவது: இரவு ஊரடங்கின் போது இரவு 10:00 முதல் காலை 4:00 மணி வரை இயங்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முக்கிய சந்திப்புகள், இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுவர்.63 இருசக்கர வாகன ரோந்து போலீசார் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிப்பர். அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுவதுடன், சி.சி.டி.வி. பொறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு தடையை மீறி செல்லும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் மீது வருவாய் துறை, போலீசார் நடவடிக்கை மேற்கொள்வர்.



ஞாயிறு முழு ஊரடங்கிலும் விதிமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாவிடில் அபராதம், வழக்கு பதியப்படும், என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X