முறையற்ற 'சப்-வே' பணிகளால் பாதிப்பு | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
முறையற்ற 'சப்-வே' பணிகளால் பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
05:26

வேடசந்துார் : வேடசந்துார் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சப்-வே பணிகள் முறையாக நடக்காததால் வாகன ஓட்டிகள் விபத்திற்கும் ஆளாகின்றனர்.



திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலை பத்து ஆண்டுகளுக்கு முன்பு 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டது. வேடசந்துார் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் முறையான சப்-வே அமைக்காததால் அடிக்கடி விபத்துக்கு ஆளாகின்றனர். குறிப்பாக திண்டுக்கல் நெடுஞ்சாலையில் காக்காத்தோப்பூரை அடுத்து ஒட்டன்சத்திரம் செல்லும் சப்-வே மண் பாதையாகவே விடப்பட்டுள்ளது. இதனால் இத்தடத்தில் வரும் வாகனங்கள் வேடசந்துார் நகருக்குள் வந்து, பிறகு ஒட்டன்சத்திரம் ரோட்டில் செல்கின்றன.



அதேபோல் வேடசந்துார் அருகே குன்னம்பட்டி பகுதியில் ரோட்டை கடக்கும் 'சப்-வே'யை முறையாக அமைக்காததால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. கடந்தவாரம் கூட ரோட்டை கடக்க முயன்ற தம்பதியினர் பலியாயினர். எனவே, நெடுஞ்சாலைத் துறை இந்த இடங்களில் முறையாக மாற்று வழித்தடங்களை அமைக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X