கொரோனா தடுப்பூசி பேட்டிகள்- தேனி | தேனி செய்திகள் | Dinamalar
கொரோனா தடுப்பூசி பேட்டிகள்- தேனி
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
05:27

ஒரே எதிர்ப்பு ஆயுதம்டாக்டர் எஸ்.செந்தில்குமார் துணை இயக்குனர், மாவட்ட பொது சுகாதாரத்துறை, தேனி: கோவாக்சின், கோவிஷீல்டு என கொரோனா தடுப்பூசிகள் இரண்டும் பொதுமக்களை பாதுகாக்கும். உயிரிழப்பை தடுக்கும். மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளோம்.மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள், 60 வயதை கடந்த முதியவர்கள் கூட தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.அவர்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. மே 1 முதல் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா அதிவேகமாக பரவக்கூடிய இந்த நாட்களில் நமக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு எதிர்ப்பு ஆயுதம் தடுப்பூசி' மட்டுமே. அதனால் மக்கள் தேவையற்ற வதந்திகளை தவிர்த்து தடுப்பூசியை தயக்கமின்றி செலுத்தி கொள்ள முன் வர வேண்டும்உயிரிழப்பை தடுக்கும்டாக்டர் சி.பி.ராஜ்குமார், நிர்வாக இயக்குனர், நலம் மருத்துவமனை, தேனி:பொதுமக்களுக்கு கோவாக் ஷீன், கோவி ஷீல்டு'' என 2 விதமான தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இரண்டுமே அங்கீகரிக்கப்பட்ட பக்கவிளைவுகள் அற்ற தடுப்பூசிகளாகும். இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திய 15 நாட்களுக்கு பின் உடலில் 80 முதல் 84 சதவீதம் மட்டுமே எதிர்ப்பு சக்தி உருவாகிறது. மிக முக்கியமாக தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் கொரோனா கிருமியானது உயிர் கொல்லி கிருமியிலிருந்து, உயிரிழப்பை ஏற்படுத்தாத கிருமியாக உருமாற்றம் ஆகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்பட 100 சதவீதம் வாய்ப்பில்லை. இதனை அனைவரும் கவனத்தில் கொண்டு உடனடியாக அரசு பொது சுகாதாரத்துறை வலியுறுத்திய தடுப்பூசிகளை தயக்கமின்றி செலுத்தி கொள்ள வேண்டும்.பக்க விளைவுகள் இல்லைடி.சண்முகப்பிரியா, மாவட்ட தொற்று நோயியல் துறை டாக்டர், தேனி: இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டதால் லேசான காய்ச்சல், உடல் அசதி தவிர, அதிக பாதிப்பு என எந்த பக்கவிளைவும் இதுவரை நிரூபிக்கப்பட வில்லை. தடுப்பூசி உடலில் அதன் செயல்பாடுகளின் திறன்களை உருவாக்க குறைந்தளவு 10 முதல் 15 நாட்கள் எடுத்துக் கொள்ளும். 2வது டோஸ் செலுத்துவதும் தற்காலிக தடுப்பு முறை மட்டுமே. சமூக இடைவெளி, முகக்கவசம், அடிக்கடி கைகழுவுதல் என்ற தாரக மந்திரத்தை கடைபிடித்தால் கொரோனாவை விரட்டலாம். கடந்த ஆண்டு பெண்களை விட ஆண்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். தற்போது தொற்று பரவும் விகிதம் அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் மிகமிக குறைவாக இருந்த போதிலும், நோய் தொற்றை முற்றிலும் தடுக்க தயக்கமின்றி தடுப்பூசி செலுத்த வேண்டும்.அவசர அவசியம்எஸ்.ராஜலட்சுமி , அரசு ஊழியர், தேனி: தேவையற்ற வதந்திகளால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது தவறு. பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். அவர்கள் நன்றாக நலமாக வாழ்ந்தால் குடும்பத்தை நலமாக பார்த்துக் கொள்ள முடியும். தேர்தல் பணிக்காக சென்றபோது கடந்த மார்ச் 21ல் கோவிஷீல்டு தடுப்பூசி முதல்டோஸ் செலுத்திக் கொண்டேன். டாக்டர்கள் கூறியபடி மிதமான காய்ச்சல் வந்து, சென்றது. அதன் பின் எந்த பக்க விளைவுகளும் இல்லை. இரண்டாவது டோஸ் செலுத்த ஆர்வமுடன் உள்ளேன். மத்திய அரசு மே 1ல் இருந்து 18 வயது நிரம்பியவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தி உள்ளது வரவேற்கத்தக்கது. உடல் நலத்தை பேணுபவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசர அவசியம்.புரளிகளை நம்ப வேண்டாம்எஸ்.சண்முகபிரியா, தாய், சேய் நல அலுவலர், வீரபாண்டி:வீரபாண்டி கிராம சுகாதார செவிலியர் பயிற்சியில் 104 பேர் பயிற்சி பெறுகின்றனர். தடுப்பூசி அனைவரும் செலுத்தி உள்ளோம். நான் கோவாக்சின் முதல் டோஸ் செலுத்தினேன். குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படுமோ என்ற ஒரு வித பயம் உள்ளது. அது தேவையற்றது. கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் இரண்டுமே பக்க விளைவுகளை தராத தடுப்பு மருந்துகள்தான். இதை வைத்து சமூகத்தில், சமூக இணைய வெளியில் ஏற்படும் புரளிகளை யாரும் நம்பக்கூடாது. கருவுற்ற தாய்மார்கள் தடுப்பூசி செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டாக்டர்களின் அறிவுறுத்தல்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்டாக்டர்கள் ஆலோசனைஎம்.நாகமணி, ஆலோசகர், ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தேனி:பிப்., 20ல் கோவிஷீல்டு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். அன்று மாலை மிதமான காய்ச்சல் இருந்தது. ஊசி செலுத்திய இடத்தில் வலி இருந்தது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி மார்ச் 25ல் செலுத்தினேன். அதேமாதிரி மிதமான காய்ச்சல் இருந்தது. பின் வந்த நாட்களில் வழக்கம் போல் பணிகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டேன். என்னைப் பொறுத்தவரை தடுப்பூசிக்கு பயப்பட அவசியம் இல்லை. சர்க்கரை, ரத்த அழுத்தம், பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரை, சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தடுப்பூசி செலுத்தும்போது அனைத்து விபரங்களையும் தயக்கமின்றி டாக்டர்களிடம் தெரிவித்த பின் அவர்களின் ஆலோசனையின் படி தடுப்பூசி எடுத்துக் கொள்வது நல்லது.மக்களிடையே விழிப்புணர்வுடாக்டர் கே.எஸ்.குமார் , கண்காணிப்பாளர், மாவட்ட அரசு மருத்துவமனை, பெரியகுளம்:கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி அவசியம் என்பதற்கு முன்மாதிரியாக நான் ஜன., 16ல் கோவிஷீல்டு தடுப்பூசியும் 28 வது நாளில் 2ம் டோஸ் செலுத்திக்கொண்டேன். மருத்துவமனையில் அனைவரும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தியதுடன், விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். இங்கு கோவிஷீல்டு, கோவாக்சின் நேற்று வரை3360 தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது. தற்போது கோவாக்சின் கையிருப்பு உள்ளது.மக்களிடையே விழிப்புணர்வு காரணமாக தினமும் 100 முதல் 120 பேர் ஆர்வமாக இதனை செலுத்திக்கொள்கின்றனர். தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு இல்லாத எதிர்மறை சிந்தனை தேவையற்றது. தடுப்பூசி செலுத்தி, கொரோனாவை துரத்துவோம்.தயக்கம் தேவையில்லைஜெ.மஹபூப்பீவி, தென்கரை நுாலக மகளிர் வாசகர் வட்டம் தலைவர், பெரியகுளம்:கொ ரோனா நம்மை தாக்காமல் இருப்பதற்கு அனைவரும் விழிப்புணர்வுடன் தடுப்பூசி செலுத்தவேண்டும். நான் கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டு டோசும் செலுத்திக்கொண்டேன். உடலும், மனதும் தெம்பாக உள்ளது. தடுப்பூசி செலுத்துவதில் தயக்கமே வேண்டாம். அதனால் உடலில் எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பதோடு, கொரோனா வைரஸ் கிருமி நம்மை நெருங்காது. இது குறித்து விழிப்புணர்வை எனது நுாலக சந்தாதாரர்கள் வாட்ஸ் ஆப் குரூப்பில் தெரிவித்து வருகிறேன். இரண்டு தடுப்பூசியும் நமக்கான 'நம்மவர்கள்'. தடுப்பூசி செலுத்தி, முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை கடைபிடித்து கொரோனாவை வெல்வோம்.பயப்பட வேண்டாம்எஸ்.காளீஸ்வரி, பட்டதாரி ஆசிரியை, ஒக்கரைப்பட்டி:மார்ச் 21-ல் முதல் முறையாக கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். வழக்கமாக படிகளில் ஏறி இறங்கினாலே எனக்கு மூச்சு வாங்கும். ஆனால் ஊசி செலுத்தியபின் தலைவலி, காய்ச்சல், உடல் அசதி உட்பட எந்த அறிகுறியும் இல்லை. எனது வீட்டில் உள்ளவர்களையும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தி உள்ளேன். தடுப்பூசிக்கு யாரும் பயப்பட தேவை இல்லை. பாதுகாப்பாகவே உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடுத்த பாரசிட்டமால்' மாத்திரை கூட பயன்படுத்தவில்லை. குறிப்பிட்ட நாளில் அடுத்த டோஸ் செலுத்திக்கொள்வேன். தடுப்பூசி செலுத்தி அனைவரும் கொரோனா ஒழிப்பில் அரசுக்கும், மருத்துவத்துறைக்கும் ஒத்துழைப்பு தர வேண்டும்.-வரப்பிரசாதம்சிராசுதீன், சித்தா டாக்டர், கம்பம்: கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டேன். முதல் டோஸ் செலுத்திய போது சிறிது காய்ச்சல் ஏற்பட்டதுபோல இருந்தது. அது இருந்தால் தான் எதிர்ப்பு புரதங்கள் உருவாகிறது என்று அர்த்தம்.பின்னர் சரியானது. தடுப்பூசி என்பது வரப்பிரசாதம். உறுதியாக கொரோனா பாதித்தவர்களை ஆபத்திலிருந்து காக்கும். கண்டிப்பாக இறப்பு இருக்காது. கொரோனாவை வெல்ல முடியும். எனது மனைவி, குடும்பத்தினர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தடுப்பூசி குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்புகின்றனர். நம்ப வேண்டாம். மே 1 முதல் 18 வயது நிரம்பியவர்கள் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. வரவேற்கத்தக்கது. அனைவரும் செலுத்தி கொரோனாவை வெல்வோம்.உற்சாகம்வி.எம்.அன்பழகன், தனியார் நிறுவன மண்டல மேலாளர், உத்தமபாளையம்:கொ ரோனா தடுப்பூசி கோவிஷீல்டு இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டேன். முதல் டோஸ் செலுத்திய உடன் காய்ச்சல் வரும், கைகால் வலிக்கும் என்றனர். ஆனால் எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. கொரோனாவை வெல்ல இதைவிட நல்ல மருந்து கிடையாது. தீவிர ஆராய்ச்சிக்கு பின் மத்தியஅரசின் ஐ.சி.எம்.ஆர். பரிந்துரைத்துள்ளது. எனவே கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பனது என்பதில் சந்தேகமில்லை. தற்போது இரண்டு டோஸ் செலுத்தியபின் மனதளவில் உற்சாகமாக உள்ளேன். என்னுடன் பணியாற்றும் பலரும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். தடுப்பூசி குறித்து வீண் வதந்திகளை பரப்புகின்றனர். அதனை நம்பாமல் அனைவரும் செலுத்திக்கொள்ள முன் வரவேண்டும்.தைரியம் கிடைத்துள்ளதுஆர்.ஷர்மிளா, முதுகலைபட்டதாரி ஆசிரியை, கூடலுார்:இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். சர்வதேச நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறது. நான் கோவிஷீல்டு இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டேன். காய்ச்சல், உடல்வலி என எதுவும் வரவில்லை. நன்றாக ஆரோக்கியமாக உள்ளேன். உளவியல் ரீதியாக தைரியம் கிடைத்துள்ளது. கொரோனாவால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசிகளை ஒரே ஆண்டில் கண்டுபிடித்து நமக்கு கொடுத்துள்ள இந்திய மருத்துவ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். அனைத்திலும் வதந்தியை பரப்புவது வாடிக்கையாகிவிட்டது. அதை புறந்தள்ளி, அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.உயிர்காக்கும் அம்சம்டாக்டர்.எஸ்.ரவீந்திரநாத், தலைமை மருத்துவ அதிகாரி, அரசு மருத்துவமனை, போடி:கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொள்ள அரசு அறிவுறுத்தி வருகிறது. நான் கோவிஷீல்டு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளேன். எனது குடும்பத்தினரும் செலுத்தியுள்ளனர். தடுப்பூசி மக்கள் அனைவருக்கும் உயிர் பாதுகாக்கும் அம்சமாக விளங்கி வருகிறது. இரண்டு தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு கொரோனா வந்தாலும் உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட போவதில்லை. நடிகர் விவேக் மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போடி அரசு மருத்துவமனையில் தடுப்பூசிகள் போதியளவு இருப்பு உள்ளது. எல்லோரும் செலுத்தி கொள்ளலாம்.நல்ல திட்டம்எம்.லட்சுமி, தலைவி, சுப்புராஜ் நகர் மகளிர் முன்னேற்ற சங்கம், போடி: கொரோனா தொற்றில் இருந்து காத்திட மக்களுக்காக மத்திய, மாநில அரசுகளின் நல்ல திட்டமான தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. ஆரம்பத்தில் எனக்கு பயமாகத்தான் இருந்தது. டாக்டர்களின் ஆலோசனை கேட்டேன். நல்லது என கூறியதால் நான், எனது கணவர், உறவினர்களும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தினோம். இதுவரை எவ்வித பாதிப்பும் இல்லை. கொரோனா பயம் போய் விட்டது. குறிப்பிட்ட நாளில் 2வது டோஸ் செலுத்த உள்ளோம். இதனை மகளிர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்தவர்களுக்குதெரிவித்ததன் மூலம் 20க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கொரோனோவிலிருந்து மக்கள் தப்பிக்க இந்த வாய்ப்பை வரப்பிரசாதமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.பரவலை தடுக்கலாம்ந.ரஞ்சித்குமார், தேசிய குழந்தைகள் நலத்திட்ட மருந்தாளுனர், எம்.சுப்புலாபுரம்:கொரோனாவில் இருந்து உயிர் காக்க அனைவரும் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா தாக்கம் ஏற்பட்டாலும் உடலில் செலுத்தப்பட்டதடுப்பூசியின் வீரியம் உயிரை காக்கும். இதனால் அடுத்தடுத்த பரவுதலை தடுக்க முடியும். நமக்கும் மற்றவர்களுக்கும் அரசுக்கும் பாதுகாப்பு. வதந்திகளை நம்ப கூடாது. எந்த தடுப்பூசி உடலில் செலுத்தினாலும் சிலருக்கு காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. பயப்படத்தேவை இல்லை. பாரசிட்டமால் மாத்திரை போதும். இரண்டு நாளில் சரியாகும். கோவி ஷீல்டு முதல் டோஸ் செலுத்தியபின் எனக்கு தொந்தரவும் ஏற்படவில்லை. தடுப்பூசிக்குப்பின் மற்ற ஊசிகளை தவிர்ப்பது நல்லது.ஆர்வம் அதிகரிப்புஜெ.மோகன்குமார், கல்வியாளர், பெரியகுளம்: கொரோனாவை கட்டுப்படுத்த கோவாக்சின் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளேன். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும். நம்பிக்கை இருந்தால் தான் வாழ்க்கையில் தைரியமாக பயணிக்க முடியும். தடுப்பூசி செலுத்திய பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொரோனாவைகட்டுப்படுத்துவோம் என முன்மாதிரியாக செயல்பட்டுள்ளார். எனது உறவினர்கள், நண்பர்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என தெரிவித்து வருகிறேன். தடுப்பூசி செலுத்திய பின் தெம்பாக உள்ளது. அது உயிர்காக்கும் கவசம். விரைவில் 2வது டோஸ் செலுத்த உள்ளேன் தடுப்பூசிக்கு வரவேற்பு அதிகம் உள்ளதால் விரைந்து செலுத்திக்கொள்ளுமாறு வாட்ஸ் ஆப் குரூப்பில் பதிவிடுகிறேன். பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X