பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் வருகை/// | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் வருகை///
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
05:38

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்க பயிற்சி புத்தகம் வந்துள்ளது.



கொரோனாவால் 10 மாதங்களுக்கு பின் கடந்த ஜன.19 ம் தேதி முதல் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பிற வகுப்புகளுக்கு ஆன்லைன், தொலைக்காட்சி வாயிலாக பாடம் கற்பிக்கப்படுகிறது. மீண்டும் கொரோனா பரவி வருவதால் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.தற்போது வகுப்புகள் நடக்காததால் மாணவர்களின் நலன் கருதி ஏற்கனவே வழங்கிய புத்தகங்களோடு தொடர்புடைய இணைப்பு மற்றும் பயிற்சி புத்தகத்தை அரசு தயாரித்துள்ளது. ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வழங்குவதற்காக புத்தகங்கள் திண்டுக்கல் வந்துள்ளன. அவற்றை பள்ளிகள் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது.பயிற்சி புத்தகத்தில் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பாடங்களை எழுதி கற்கலாம். இணைப்பு புத்தகத்தில் உள்ள பாடங்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்பிக்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X