கனரக வாகனங்களால் போக்குவரத்து இடையூறு | தேனி செய்திகள் | Dinamalar
கனரக வாகனங்களால் போக்குவரத்து இடையூறு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
05:41

போடி, : போடி குப்பிநாயக்கன்பட்டி செல்லும் ரோட்டில் தடையை மீறும் கனரக வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.



இந்த ரோட்டில் பள்ளிகள், ஜெராக்ஸ் சென்டர்கள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் அதிகம் உள்ளன. இருபுறமும் கடை வைத்துள்ளவர்கள் ரோட்டின் முன்பாக போர்டுகள் வைத்தும், வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.கனரக வாகனங்கள், சரக்கு லாரிகளை நிறுத்தி வருவதால் காலை, மாலையில் டூவீலர், கார், ஆட்டோ உள்ளிட்ட மற்ற வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.காலை, மாலையில் கனரக வாகனங்கள் செல்ல கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை போர்டு வைத்தும் பயனில்லை. இதில் டி.எஸ்.பி., உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X