கொரோனா தாண்டவத்தை தடுப்பூசி செலுத்தி வெல்வோம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
05:44

திண்டுக்கல் : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீயெனப் பரவுகிறது. இதற்கென பிரத்யேக சிகிச்சை முறை இல்லை. மருந்து, மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் பெரும் வரமாய் தடுப்பூசி வருகை அமைந்துள்ளது.



இந்தியாவில் ஜனவரி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது. கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில வெளிநாட்டு தடுப்பூசிகளை மத்திய அரசு அனுமதிக்க இருக்கிறது. இதுவரை 11.52 கோடி கோவிஷீல்டு, 1.14 கோடி கோவாக்ஸின் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. எப்போதும் சுகாதார நடவடிக்கையில் முந்தி நிற்கும் தமிழகம், தடுப்பூசி செலுத்தும் பணியில் மட்டும் பிற மாநிலங்களை காட்டிலும் சற்றே பின்தங்கியுள்ளது. இதற்கு மக்களிடம் காணப்படும் ஆர்வமின்மை, தேவையற்ற பயம், பரவும் வதந்திமுக்கிய காரணங்களாக இருக்கின்றன. ஆனால், 'யாரும் பயப்பட தேவையில்லை.



தடுப்பூசி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்' என டாக்டர்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் அளித்த பேட்டி:எந்தவித பாதிப்புமில்லை முத்துச்சாமி, டி.ஐ.ஜி., திண்டுக்கல்: தடுப்பூசி 2 டோஸ்களும் செலுத்திக் கொண்டேன். எந்தவித பாதிப்புமில்லை. இணைநோய் அல்லது வேறு நோய்களுக்காக மருந்து எடுத்துக் கொள்பவர்கள் மட்டும் டாக்டர்களிடம் கலந்தாலாசித்து தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். முகக்கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்றி கொரோனா பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.தடுப்பூசி என்ற ஆயுதம்பார்த்தசாரதி, மாநில செயலாளர், அரசு அலுவலர் ஒன்றியம், திண்டுக்கல் கடந்தாண்டு கொரோனா பரவல் தொடங்கிய போது என்ன செய்வதென தெரியவில்லை. தற்போது பரவல் அதிகமாயினும் தடுப்பூசி என்ற ஆயுதம் உள்ளது. இதனை பொதுமக்கள் அச்சமோ, தயக்கமோ இன்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் விரைவில் கொரோனாவை விரட்டி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவோம்.வதந்தியை நம்பாதீங்கமேடா பாலன், செயலாளர், வர்த்தகர் சங்கம், திண்டுக்கல்: டாக்டர் ஆலோசனைப்படி முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்கிறேன்.



உடல் வலி, சோர்வு எதுவும் ஏற்படவில்லை. நடிகர் விவேக்கின் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை. அதனால் வீண் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தொற்று பரவலை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம். தடுப்பூசி அவசியம்ராஜாராம் 50, கல்லுாரி பேராசிரியர், திண்டுக்கல்: இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி விட்டேன். ஒரு நாள் மட்டும் சோர்வாக இருந்தது. மறுநாள் தானாகவே சரியாகி விட்டது. தொற்றில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி அவசியம். நாட்டில் பல கோடி பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தற்போது பாதுகாப்பாக உணர்கிறேன். தொற்று பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம். தடுப்பூசி மட்டுமே வழிஉதயகுமார், தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை, பழநி: தடுப்பூசிக்கு பயப்படவோ, தயக்கமோ வேண்டாம். தடுப்பூசி பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பின்பே அனுமதிக்கப் பட்டுள்ளது. தற்போதைய நிலையில் தடுப்பூசி மட்டுமே தொற்றை தடுக்கும் வழி. உலக நாடுகள் அனைத்தும் அதனை பயன்படுத்த துவங்கி உள்ளன. இணை நோய்கள் உள்ளவர்கள் முதலில் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள். தடுப்பூசியால் பெருமைப்படுகிறேன்சுரேஷ், தலைவர், தங்கரத அரிமா சங்கம், பழநி: பத்து நாட்களுக்கு முன் தடுப்பூசி செலுத்தியுள்ளேன். எனது இயல்பான வேலைகளை செய்து வருகிறேன். உடல்நிலையில் தொந்தரவு இல்லை. தொற்று அதிகமாக பரவி வரும் இச்சூழலில் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்திய அரசு தயாரித்த தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். ஆரோக்கியமாக இருக்கிறேன்ஜானகி, இல்லத்தரசி ,கொடைக்கானல்.கடந்த வாரம் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். எனக்கு இருதயம் தொடர்பான பிரச்னை உள்ளது. எங்களது குடும்ப டாக்டர் ஆலோசனைப்படி தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். இரு தினங்கள் ஓய்வில் இருந்தேன். தற்போது முழுஆரோக்யத்துடன் இருக்கிறேன். எனவே தடுப்பூசி செலுத்தினால் பாதுகாப்பாக இருக்கலாம்.பிரசாரத்திற்கு உதவியது-எம் ஸ்ரீதர், முன்னாள் நகராட்சி தலைவர், கொடைக்கானல்.தேர்தலுக்கு முன்னர் தடுப்பூசி செலுத்தி கொண்டேன். சிலவாரங்களாக பிரசாரத்தில் ஈடுபட்டாலும் அசவுகரியம் எதுவும் ஏற்படவில்லை. வழக்கமான சுறுசுறுப்புடன் செயல்படுகிறேன். தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் எவ்வித பக்கவிளைவும் ஏற்படவும் இல்லை. அதுவே எனக்கு பாதுகாப்பாக இருந்ததால் தேர்தல் பிரச்சாரத்தில் களப்பணி ஆற்ற உதவியது. தயங்காமல் செலுத்தலாம்ராசியப்பன், காந்தி மார்க்கெட் சங்க செயலாளர், ஒட்டன்சத்திரம்: நான் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் கடந்த மார்ச்சில் கொரோனா தடுப்பூசி முதல் டோசையும், ஏப்ரலில் 2வது டோசையும் செலுத்திக் கொண்டேன். இதுவரை எவ்விதமான பக்க விளைவுகளும் இல்லை. ஒரு நாள் கூட மார்க்கெட் செல்லாமல் இருந்ததில்லை. ஆயிரம் சதவீதம் நம்பி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். பயப்படத் தேவையே இல்லை. வழக்கமான பணி செய்கிறேன்ராசப்பன், சுமைதுாக்கும் தொழிலாளி, ஒட்டன்சத்திரம்அறுபது வயதாகும் நான் கொரோனா தடுப்பூசி 2 டோசையும் போட்டுள்ளேன். ஊசி போட்டுக் கொண்ட பின்பு காய்ச்சல், தலைவலி உள்பட எந்த பிரச்னையும் வரவில்லை. வழக்கம் போல் என்னுடைய வேலைகளை செய்து வருகிறேன். என்னுடைய வயதுள்ளவர்கள் தயங்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். பக்க விளைவுகள் வருமோ என்ற பயமே தேவையில்லை.பயமின்றி இருக்கலாம்-ஏ. தேவி, இல்லத்தரசி, வத்தலக்குண்டு.வயதானவர்களுக்கு தடுப்பூசி வரப்பிரசாதம். தொற்று நோய்களுக்கு வைத்தியம் இல்லாததால் தடுப்பூசி ஒன்றே அருமருந்து. தடுப்பூசி செலுத்தினால் கொரோனா தொற்று அச்சமில்லை. நான் இரண்டு டோஸ் எடுத்தபின் நன்றாகவே வீட்டு வேலைகளை செய்து நல்லபடியாகவே உணருகிறேன். எனவே, தடுப்பூசி செலுத்தினால் உயிர் பயமின்றி வாழலாம்.சுறுசுறுப்பாக இருக்கிறேன்-எம் முத்துராமன், வத்தலக்குண்டு.: இன்று நான் 2வது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்கிறேன். முதல் டோஸ் எடுத்தபோது காய்ச்சல் இருக்கும். பயப்பட வேண்டாம் என்றனர். அதற்கான மாத்திரையும் தந்தனர். ஆனால் காய்ச்சல் வரவில்லை. உடம்பு வலி இருந்தது. அதன்பின் சுறுசுறுப்பாக வேலை செய்கிறேன். தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்பு முன்பை விட நன்றாக உள்ளது.உள்நோக்கத்துடன் வதந்தி-கே.மணிவண்ணன், செயலாளர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, வெள் பொம்மன்பட்டி.சிறு குழந்தைகளுக்கு தட்டம்மை, போலியோ நோய்களுக்கு எதிராக தடுப்பு மருந்து செலுத்தப்படுவது போன்றதே கொரோனா தடுப்பூசியும். இதனை அவசியம் எடுத்து கொள்ள வேண்டும். இதுகுறித்து சிலர் உள்நோக்கத்துடன் வதந்திகளை பரப்புகின்றனர். தடுப்பூசி எடுத்தபின் சிலருக்கே லேசான அவதி, காய்ச்சல் ஏற்படும். வேறு எந்த பாதிப்பும் கிடையாது.அலட்சியம் வேண்டாம்எம்.மாரியப்பன், தலைவர், சைவ வைணவ ஆன்மிக அறக்கட்டளை, வடமதுரைபெரும் முயற்சியில் கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசியை அலட்சியப்படுத்தக் கூடாது. தடுப்பூசி செலுத்திய பின்னர் பாதிப்பு ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்தில்லை என்பது சிறப்பு. தாய் நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்களே தடுப்பூசிக்கு எதிராக வதந்தி பரப்புகின்றனர். அசுர வேகத்தில் பரவும் தொற்றில் இருந்து காக்க அனைவரும் தடுப்பூசி எடுப்பதே நல்லது. முற்றுப்புள்ளிக்கான தடுப்பூசிஏ.ராஜரத்தினம், முன்னாள் மாவட்ட தலைவர், விவசாயிகள் சங்கம், பாளையம்.முன்பு வந்த பிளேக், காலரா, பெரியம்மை, இளம்பிள்ளை வாதம் போன்றநோய்களை தடுப்பூசியால் அறிகுறியே இல்லாமல் செய்துவிட்டனர்.இன்று கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதை மக்கள் பயன்டுத்திக்கொள்ள வேண்டும். நான் 2 தடுப்பூசி செலுத்தியும் எந்தபாதிப்பும், பக்க விளைவுகளும் இல்லை. வழக்கம்போல் பணிசெய்கிறேன்.ஒத்துழைப்பு தரவேண்டும் எஸ்.அன்புச்செல்வன், அரசு தலைமை மருத்துவர், வேடசந்துார்கொரோனா பாதித்தவர் தும்மும்போதும், இருமும் போதும் அருகில் உள்ளவர்களுக்கு பரவக்கூடியது. அதனால் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகவே தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தப்படுகிறது. நானும் 2 டோஸ் செலுத்திக் கொண்டேன். இதனால் பாதிப்பு வரும் என்பது தவறு. அனைவரும்தடுப்பூசி செலுத்தி அரசின் செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பு தரவேண்டும். ஒத்துழைக்க வேண்டும்ஜெ.லியோன்வினோத்குமார், முதன்மை மருத்துவர், அரசு மருத்துவமனை, ஆத்துார்:நான் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டேன். முதல் டோஸ் செலுத்திய 15 நாட்களில் உடலின் எதிர்ப்புத்திறன் வலுப்பெறுகிறன்றன. 2 வது டோஸ் மூலம் முழுமையான எதிர்ப்புத்திறன் கிடைக்கிறது. இந்த நோய் தடுப்பூசியால் கட்டுப்படுவது வரை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளனர். அரசு செயல்பாட்டுக்கு மக்கள் ஒத்துழைத்தால்தான் பரவலை கட்டுப்படுத்த முடியும். தடுப்பூசி வரம் போன்றதுடி.பிரியதர்ஷினி, ஆசிரியை, ஊ. ஒ. தொடக்கப்பள்ளி, சித்தையன்கோட்டை:கொரோனா கொடுந்தொற்றாக பரவி வருகிறது. இதில் நம்மை தற்காத்துக் கொள்ள தடுப்பூசியை வரமாக கருதுகிறேன். எங்கோ, எதற்கோ நடந்த ஒரு பாதிப்பை தடுப்பூசியுடன் முடிச்சுப்போட்டு, சேர்த்து பேசுவது ஏற்புடையதல்ல. தடுப்பூசிக்கு தயக்கம் காட்டுவதால் நோய் எதிர்ப்புத்திறன் ஏற்பை ஒத்தி வைக்கிறோம் என்பதே உண்மை.-

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X