உத்தமபாளையத்தில் கோவிட் கேர் சென்டர் | தேனி செய்திகள் | Dinamalar
உத்தமபாளையத்தில் கோவிட் கேர் சென்டர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
05:44

உத்தமபாளையம் : உத்தமபாளையம் கல்லுாரியில் 100 படுக்கைகளுடன் கோவிட் கேர் சென்டர் மீண்டும் துவக்கப்படுகிறது.



கொரோனா இரண்டாம் அலைவேகமாக பரவி வருகிறது. கடந்தாண்டு ஜூலையில் இருந்த பாதிப்பு இந்தாண்டு ஏப்ரல் மாதமே உள்ளது.எனவே சிகிச்சைக்காக கோவிட் கேர் சென்டர்களை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்தாண்டு உத்தமபாளையம் தனியார்கல்லுாரியில் 100 படுக்கைகளுடன் கோவிட் கேர் சென்டர் செயல்பட்டது.ஆனால் தற்போது உத்தமபாளையம் தாலுகாவில் கொரோனா பாதித்தவர்களை போடி கோவிட்கேர் சென்டருக்கு அனுப்பி வருகின்றனர். இதனால் வாகன பற்றாக்குறை, எரிபொருள் செலவு அதிகம் ஆகிறது. எனவே உத்தமபாளையம் கல்லுாரியில் 100 படுக்கைகளுடன் கொண்ட கோவிட் கேர் சென்டரை மீண்டும் துவக்க முடிவு செய்துள்ளனர். கம்பம் அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X