கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மெத்தனம் | தேனி செய்திகள் | Dinamalar
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மெத்தனம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
05:45

சின்னமனுார் : சின்னமனுாரில் நேற்று முன்தினம் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். காந்திநகர் காலனி, வெள்ளையன் தெரு, சிவசக்திநகர், வ.உ.சி. தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.



அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அப்பகுதிகளில் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுப்பதில் நகராட்சி மெத்தனப்போக்கில் உள்ளது. குறிப்பாக கபசுர குடிநீர் வழங்கும் முகாம், கிருமிநாசினி தெளிப்பது, கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்வது, முககவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது என எந்த பணியும் செய்யப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X