கோடை மழையில் நிறைந்த ஒண்டிப்புலி | விருதுநகர் செய்திகள் | Dinamalar
கோடை மழையில் நிறைந்த ஒண்டிப்புலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
05:51

விருதுநகர் : விருதுநகரில் தொடர்ந்து பெய்த கோடை மழையால் ஒண்டிப்புலி நீர்தேக்கம் நிறைந்தது. இதனால் மே யில் ஏற்படும் குடிநீர் தட்டுபாட்டுக்கு தீர்வு கிடைத்துள்ளது.



விருதுநகர் நகராட்சி பகுதிகளுக்கு ஒண்டிப்புலி, தாமிரபரணி, ஆனைக்குட்டம் அணை, காரிசேரி போர் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நகருக்கு தினமும் 60 லட்சம் லிட்டர் தேவை. வறட்சி, தாமிரபரணி குடிநீரில் ஏற்படும்சிக்கலால் 45 லட்சம் லிட்டரே கிடைக்கிறது. உள்ளூர் நீராதாரங்களான ஆனைக்குட்டம், ஒண்டிப்புலி நீர் தேக்கம் நிறைந்தால் மட்டுமே தன்னிறைவான குடிநீர் சப்ளைக்கு சாத்தியம்.பிப்ரவரி, மார்ச்சில் அதிகரித்த வெயிலால் இங்கு நீர் குறைந்த நிலையில் கொடை மழையால் ஒண்டிப்புலி நீர்தேக்கம் நிறைந்துள்ளது. இதனால் கோடையில் குடிநீர் தட்டுபாட்டை சமாளிக்கலாம் என்கின்றனர் நகராட்சி அதிகாரிகள்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X