அச்சம்! திறந்தவெளி தின்பண்டங்களால் நோய்கள்..... கொரோனா காலத்தில் இதை தடுக்கலாமே | விருதுநகர் செய்திகள் | Dinamalar
அச்சம்! திறந்தவெளி தின்பண்டங்களால் நோய்கள்..... கொரோனா காலத்தில் இதை தடுக்கலாமே
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
05:52

அருப்புக்கோட்டை : கொரோனா பரவி வரும் சூழ்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் திறந்தவெளியில் சுகாதாரமற்ற தின்பண்டங்களை விற்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



கொரோனா இரண்டாம் அலை பரவுவதையடுத்து அரசு நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதே போல் டீக்கடை , ஓட்டல்களில் சுகாதாரமான உணவுகளை வழங்கவும், திறந்தவெளியில் தின்பண்டங்களை விற்காமல் மூடி வைத்து விற்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தவேண்டும்.பல ஊர்களில் டீக்கடைகள, தின்பண்டங்கள் விற்பபவர்கள் இதை கடை பிடிப்பதில்லை. பெரும்பாலான டீக்கடைகளில் வடைகள், பஜ்ஜிகள் உட்பட தின்பண்டங்கள் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளன. கடைக்கு வரும் யார் வேண்டுமானாலும் அவர்களுக்கு பிடித்த வடை, பஜ்ஜி உள்ளிட்ட தின்பண்டங்களை கைகளால் தொட்டு எடுக்கின்றனர்.



இதுவும் கொரோனா தொற்றுக்கு காரணமாகிறது.........மூடி வைத்தல் அவசியம்டீக்கடைகளில் கடை பணியாளர் மட்டும் கையுறை, முக கவசம் அணிந்து தின்பண்டங்களை எடுத்து கொடுக்க வேண்டும். தொட்டு எடுக்க அனுமதிக்க கூடாது. இவ்வாறு செய்வதின் மூலம் தொற்று குறைய அதிக வாய்ப்பு உண்டு. சுடுதண்ணீரில் தான் கப்புகளை கழுவ வேண்டும். இதை சுகாதார துறையினர் கண்காணிக்க வேண்டும்.அழகர்சாமி, சமூக ஆர்வலர் ,அருப்புக்கோட்டை.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X