கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் | சிவகங்கை செய்திகள் | Dinamalar
கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
05:52

சிவகங்கை : காரைக்குடி, இளையான்குடியில் நடந்த இரு கொலை வழக்கில் குற்றவாளிகளை எளிதில் கண்டறிய உதவிய மோப்ப நாய் லைக்கா, ராம்போவிற்கு எஸ்.பி., பரிசு வழங்கினார்.



காரைக்குடி கழனிவாசல் வாரச்சந்தையில் மீன் வியாபாரி திருச்செல்வம் 29, கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் தொடர்புடையவர் முத்துமணி, அவரது சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். மோப்ப நாய் ராம்போ, துல்லியமாக அவர் தங்கியிருந்த வீட்டை கண்டறிந்தது. அதே போன்று இளையான்குடி அருகே அதிகரம் கிராமத்தில் கரிகாலன் 48, கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் மோப்ப நாய் லைக்கா சென்று, குற்றவாளிகளின் வீட்டிற்குள் சென்று தங்கியதை வைத்து, போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர்.



இவ்விரு கொலை வழக்கிலும், போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்கிய போலீஸ் மோப்ப நாய் மற்றும் அவற்றிற்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் வீரமணி, வீரக்குமார், மணிமாறன், கோபால் ஆகியோருக்கு எஸ்.பி., ராஜராஜன் வெகுமதி அளித்து, பாராட்டினார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X