கொரோனா டாக்டர்கள் பேட்டி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
05:54

விருதுநகர் : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீயெனப் பரவுகிறது. இதற்கென பிரத்யேக சிகிச்சை முறை இல்லை. மருந்து, மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் பெரும் வரமாய் தடுப்பூசி வருகை அமைந்துள்ளது.



இந்தியாவில் ஜன., முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது. கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில வெளிநாட்டு தடுப்பூசிகளை மத்திய அரசு அனுமதிக்க இருக்கிறது. இதுவரை 11.52 கோடி கோவிஷீல்டு, 1.14 கோடி கோவாக்ஸின் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. எப்போதும் சுகாதார நடவடிக்கையில் முந்தி நிற்கும் தமிழகம், தடுப்பூசி செலுத்தும் பணியில் மட்டும் பிற மாநிலங்களை காட்டிலும் சற்றே பின் தங்கியுள்ளது. இதற்கு மக்களிடம் காணப்படும் ஆர்வமின்மை, தேவையற்ற பயம், பரவும் வதந்தி முக்கிய காரணங்களாக இருக்கின்றன. ஆனால், 'யாரும் பயப்பட தேவையில்லை. தடுப்பூசி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்' என டாக்டர்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.



அவர்கள் அளித்த பேட்டி:நம்பிக்கை வைக்க வேண்டும்டாக்டர் கு.கணேசன், மருத்துவ எழுத்தாளர், ராஜபாளையம்: தடுப்பூசியினால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படுவது இல்லை. உயிரிழப்புகளில் இருந்து காப்பது மட்டுமே நடைபெறுகிறது.தடுப்பூசிகள் குறித்து துறை சார்ந்த மருத்துவர்கள் , அறிவியலாளர்கள் கூறும் விளக்கங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். விளம்பர நோக்கில் கருத்து கூறுபவர்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள கூடாது வெளிநாடுகளில் பல்லாயிரக் கணக்கில் செலவழித்து பற்றாக்குறைஏற்பட்டு வரும் இந்த தடுப்பூசிகளை, அரசு சார்பில் கடை நிலை மக்கள் வரை பயன்பெற இலவசமாக செலுத்தி வருவதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.



பயம் வேண்டாமே-காளிராஜ், அரசு மருத்துவர், ஸ்ரீவில்லிபுத்துார்: தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொருவரும் தடுப்பூசி போடுவது அவசியம் தற்போதைய சூழலில் தடுப்பூசி போடுவதே உயிரை காப்பாற்றும் ஒரே வழியாகும். இணை நோய் உள்ளவர்களும் பயப்படாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி போட்டாலும் அரசின் வழிகாட்டு விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டும். தடுப்பூசி போடுவதில் பொதுமக்களுக்கு பயமே வேண்டாம்.நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்டாக்டர் முனி சாயி கேசவன், தலைமை மருத்துவ அலுவலர், அரசு மருத்துவமனை சாத்துார்: கோவாக்சின், கோவிஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளையும் எடுத்து கொள்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி வருகிறது. இவற்றை எடுத்து கொள்பவர்களுக்கும் சிறிய அளவிலான காய்ச்சல், உடல்வலி ஏற்பட வாய்ப்புண்டு அவற்றை பெரிது படுத்த தேவையில்லை . இரண்டு தடுப்பூசிக்கும் இடையில் குறைந்தது 28 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். உலகின் கொரோனா தடுப்பூசிகளில் இந்திய தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளதாக, கொரோனா நோயை தடுப்பதில் சிறந்த பங்களிப்பை தந்து வருகின்றன.இளைஞர்கள் முன்வர வேண்டும்அரவிந்த்பாபு, நிலைய மருத்துவ அலுவலர், அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரி, விருதுநகர்: இளைஞர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள முன்வர வேண்டும். அவர்களுக்கு வரும் கொரோனா நோயானது அறிகுறிகள் இன்றி காணப்படுவதால் கொரோனா இல்லை என நினைத்து வெளியிடங்களுக்கு செல்கின்றனர். இதனால் பெரியவர்கள், ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இளைஞர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள முன்வர வேண்டும். இரண்டாவது அலையை ஒன்று சேர்ந்து எதிர்கொள்வோம்.அவசியம் போட வேண்டும்டாக்டர் மகேஸ்வரன், அரசு மருத்துவர், அரசு மருத்துவமனை, அருப்புக்கோட்டை: இரண்டு விதமான ஊசிகள் போடப்படுகிறது. இவற்றை செலுத்தி கொண்டால் கொரோனா தீவிர தன்மை குறையும், இறப்பை தடுக்கும். பக்க விளைவுகள் இல்லை. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் போட்டுக் கொள்ளலாம். இணை நோய்களான ரத்த கொதிப்பு, தைராய்டு, சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளவர்கள் அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும்.யாருக்கும் பாதிப்பில்லைஅய்யனார், தலைமை டாக்டர், அரசு மருத்துவமனை, சிவகாசி: ஜன. 16 லிருந்து மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எங்களது ஊழியர்கள் வயது வித்தியாசமின்றி அனைவரும் போட்டுள்ளோம். தடுப்பூசி போட்டுக் கொள்ள யாருக்கும் தயக்கம் தேவையில்லை. ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு நல்ல எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது. நாங்களே முன் உதாரணமாக நடந்துள்ளோம். சிலர் பயத்தில் இருந்தனர். இப்போது அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டு தாமாகவே ஆர்வமுடன் தடுப்பூசி போட வருகின்றனர். தடுப்பூசி போட்டு கொண்ட யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை.தாமாக முன் வந்து தடுப்பூசிசசிகலா, டாக்டர், நகர் புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சிவகாசி: மக்கள் துவக்கத்தில் ஊசி போட தயங்கினர். தற்போது தாமாகவே வந்து ஊசி போட்டு செல்கின்றனர். முதல் டோஸ் அனைவருக்கும் போட்டு முடித்தாயிற்று. விரைவில் 2 வது முறை தடுப்பூசி போட உள்ளோம். தடுப்பூசி போட்டு கொண்டால் நல்லது என பொதுமக்கள் நினைக்க துவங்கி உள்ளனர். இது வரவேற்கத்தக்கது. இதனால் கொரோனாவால் தாக்கப்பட்டாலும் பாதிப்பு இல்லை என மக்கள் உணர்ந்துள்ளனர்.ஆரம்பத்திலே மீளலாம்பிருந்தா, அரசு மருத்துவர், காரியாபட்டி: 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்கிற நிலை மாறி, தற்போது 18 வயதிலிருந்தே தடுப்பூசி போட்டு கொள்வது அவசியமாகிறது. காரணம் 2வது அலை கொரோனா இளம் வயதினரை எளிதில் தாக்குகிறது. எங்கேயோ ஒரு சில இடங்களில் மரண சம்பவம் நடக்கிறது. ஆனால் அதை இதனுடன் தொடர்பு படுத்தி பேசுவது தவறானது. தடுப்பூசி போடுவதால் கொரோனா தாக்கத்தின் தீவிரத்தை குறைத்து ஆரம்பகட்ட நிலையிலேயே மீண்டு விடலாம். தடுப்பூசி போட்டால் என்ன ஆகுமோ என்கிற மனநிலையில் மக்கள் உள்ளனர். போடாவிட்டால் இதைவிட பாதிப்பு அதிகமாக இருக்கும். அவசியம் தடுப்பூசி போட வேண்டும்.எப்போதும் போல் இருக்கிறேன்உமாசந்திரசேகர், கர்நாடக இசைப்பாடகி, ஸ்ரீவில்லிபுத்துார்: தடுப்பூசி போடுவதற்கு முன்பு ஒரு வித டென்ஷனும், பயமும் இருந்தது. இதனால் ஊசி போடுவதை தள்ளி போட்டு வந்தேன். இருந்தபோதிலும் அரசின் அறிவுரையை ஏற்று கொள்வது அவசியம் தானே என்பதை உணர்ந்து தடுப்பூசி போட்டேன். தற்போது தடுப்பூசி போட்டு பலநாட்கள் ஆகியும் இன்றுவரை வழக்கம்போல் பணி செய்கிறேன். பயமில்லை.தடுப்பூசி போடுவது அவசியமே .விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்உஷாராணி,இன்னர் வீல் கிளப் தலைவர், ராஜபாளையம்: இரண்டாவது கொரோனா தடுப்பூசி போட்டு இரண்டு வாரங்கள் முடிந்து விட்டது. எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை. எங்கள் கிளப்பில் உள்ள அனைவருக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும்,இதைப் பற்றிய விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம். தேவையற்ற சந்தேகங்களுக்கு இடம் கொடுக்காமல் அரசு சார்பில் வழங்கப்படும் உயிர் காக்கும் தடுப்பு மருந்தை தாமதமின்றி செலுத்தி கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்.கட்டாயம் தடுப்பூசி போடுங்கசி.வி.கருப்பசாமி, ஓய்வு விஞ்ஞானி, பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம், விருதுநகர்: கொரோனா தடுப்பூசியை இரண்டு டோஸ் போட்டு கொண்டுள்ளேன். உடலில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒவ்வாமையும் இல்லை. போலியோ எனும் இளம்பிள்ளை வாத நோய்க்கு முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போட்டு கொள்வது போல், கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வது அவசியமானது. 18 வயதுக்கு மேற்பட்ட இருபாலரும் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம்.தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடுகே.காளீஸ்வரி, இணை செயலாளர், சிவகாசி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு: கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளதால் அரசு கூறும் வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் மட்டுமே கொரோனா பரவாமல் தடுத்திட இயலும். தடுப்பூசி போட்டு கொள்வதால் ஒவ்வாமை ஏற்படும் என பொய்யான தகவல் பரப்பும் சில சமூக வலைதளங்களை போலீசார் முடக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டோரும் தடுப்பூசி போட்டு கொள்வது நல்லது. இதற்காக இலவச தடுப்பூசி முகாம் அமைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.நம்பிக்கையுடன் நல்வாழ்வுரேணுகாதேவி, பேராசிரியை, அருப்புக்கோட்டை: நான் 2 டோஸ் போட்டுக் கொண்டேன். எந்தவித பக்க விளைவும் எனக்கு இல்லை. என் அம்மாவும் போட்டுக் கொண்டார்கள். மருத்துவர்களின் அறிவுரைப்படி, டெஸ்ட் செய்த பிறகு போட்டுக் கொள்ளலாம். எந்தவித பயமோ, தயக்கமோ தேவையில்லை. நம்பிக்கையுடன் தடுப்பூசி போட்டுகொண்டு நலமுடன் வாழ்வோம்.பெண்களுக்கு பயம் வேண்டாம்ராஜேஸ்வரி, உறுப்பினர், அன்பால் இணைவோம் , சிவகாசி: தடுப்பூசி போட்ட பின் 2 நாளைக்கு உடல் வலியாக இருந்தது. ஆனால் எந்த வித பக்கவிளைவுகளும் இல்லை. பெண்கள் பயமில்லாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். பக்க விளைவுகள் தரும் மருந்துகளை அரசோ, சுகாதார துறையோ பரிந்துரைப்பதில்லை. பொதுமக்களின் நலனுக்காக அவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்க வேண்டும். தற்போது கொரோனா 2 ம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம்.அச்சம் தேவையில்லைதி.சாந்தி, தனியார் ஊழியர், சாத்துார்: கோவிசீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டேன். இரு நாள் சிறிய அளவில் காய்ச்சல்,உடல் வலி இருக்கும் என டாக்டர்கள் கூறினர். எனக்கு காய்ச்சல் வரவில்லை. உடல் மட்டும் சிறியளவில் வலித்தது. நான் வழக்கமாக மேற்கொள்ளும் வேலைகளை செய்தேன். எந்த பாதிப்பும் இல்லை. பெருந்தொற்று பரவலை தடுப்பது அனைவரின் கடமை. அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசி எடுத்துக் கொண்டு, அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.பாதுகாப்பானதாக இருக்கும்மாரிராஜன், தொழிலதிபர், காரியாபட்டி: தடுப்பூசி போட தயக்கம் இருந்தது. 45 வயதுக்கு மேல் கட்டாய தடுப்பூசி போடணும் என அறிவுறுத்தியதால் குடும்பத்தினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டோம்.இரண்டு நாளைக்கு காய்ச்சல் இருக்கும் என டாக்டர் தெரிவித்தார். பயப்படும்படியாக எந்த ஒரு தொந்தரவும் இல்லை. தடுப்பூசி போட பயம் வேண்டாம். அனைவரும் போடுவது நல்லது.தடுப்பூசி எடுத்து கொண்டால் நமக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் பாதுகாப்பானதாக இருக்கும். விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X